பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அம்மையும் அப்பனும் ஐம்பூதங்களையும் எடுத்துக் கொண்டு தனித்தனியே பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாய நிலைகளில் அமைந்த உலகங்களையும் சூக்கும-துல சரீரங்கள் காண முடியாத அப்புறத்தே அமைந்த உலகங்களையும் வகைப்படுத்தி அவர் காட்டுவதை நல்லவராகிய வல்ல வரே உணர முடியும்; அல்லது உலகெலாம் என அடி எடுத்துத் தந்த அந்த ஆண்டவனாலேதான் முடியும். பின்பு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற வகைகளிலேயும் உலகுகளைக் காட்டுகின்றார் இவ்வாறு பலப்பல வகைகளில் அந்தப் பெரிய அளவில் நாற்பத் தொரு பக்கங்களில் காட்டும் உலகங்களை நம்மால் எண்ண முடியாது. ஒரு வேளை இந்த அண்டத்திற்கு அப்பாற்பட்ட உலகங்களாகவும் இருக்கலாம் 'கண் உள்ளவன் காணக் கடவர் என்று பெரியோர்கள் கூறுவது போன்று, தெளிந்த ஞானக் கண்ணுடையவர் களே அத்தனை உலகங்களையும் எண்ணிப் பார்க்க முடியும். அத்தனையும் காட்டி முடிவில் சச்சிதானந்தஅகண்ட-ஐக்கிய-சிவசாட்சாத்தார - அனுபவ உலகு என முடிக்கின்றார். இவ்வாறு அளப்பருந் தன்மைத்தாய் அண்டாண்டங்களில் அமைந்த உலகங்கள் எண்ணற்றன. அவற்றுள் ஒன்றாகிய-அணுத்தன்மை வாய்ந்த இச்சிறு உலகத்தில் வாழும் நாம் இன்று இந்த அண்டச் சுழற்சியில் நின்று கொண்டிருக்கிறோம். நாம் வாழும் உலகம் சுற்றுவதை நாம் அறிவோம். விஞ்ஞானமும், விண்வெளிப் பயணமும் காட்டுகின்றது. அப்பூவுலகம் ஞாலமாய் யாதொரு பற்றுக்கோடும் இன்றி, இது போன்ற பிற உலகங்களுடன்-ஒன்றனுக் கொன்று ஈர்க்கும் சக்தியால் கூடியவரையில் இடம் பெய ராது உழன்று கொண்டே இருக்கிறது. நான் மேலே கூறியபடி இந்த ஞாலம் அணுவுக்குள் அனு; இதன் காலம்