பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி, 157. நொடிக்குள் நொடி, அதில் ஒரு சில ஆண்டுகளே வாழும் நம் காலத்தையும் இடத்தினையும் எப்படி கணக்கிட முடியும்?-தூசுக்குள் தூசாகவும் எண்ண இயலாதே. இந்த உண்மையை உணர்வதே நம் கடமை. எனவே பரந்த அண்ட கோளச் சுழற்சிக்கிடையில் தொங்கிச் சுழலும் நம் ஞாலத்தின் நிலையினையும் அதில் சில நாள் வாழும் நம் நிலையினையும் எண்ணிப் பார்த் தால் மனிதன் மனிதனாகவே வாழ்வான். அப்படி வாழும் போது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணும் இரக்க நெறியும் எவ்வுயிரும் பராபரன் சன்னிதியதாகும்' என்ற தெய்வ நெறியும் யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தெளிந்த நெறியும் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்று ஒன்றிய நெறியும் அவன் வாழ்க்கை நெறிகளாக' அமையும். அத்தகைய உயர்ந்த தெய்வ நெறி கலந்த மனித வாழ்வுக்கு வழி காட்டுவதே இம்மாதத்திய நான்கு சொற்பொழிவுகளின் முடிந்த முடிபாகும். காணக் கண் வேண்டும், கருத உளம் வேண்டும். பெரியோர்களே! இத்தகைய மனித நெறிக்கு ஆற்றுப் படுத்துவதே பெரியார் வாய் மொழிகளும் செயல்களும், இறைவன்; அம்மை, உயிர், அண்டம் இந்த நான்கினையும் இணைத்து எண்ணி உணர்ந்து நிற்கின்ற நாம், இந்த நிர்வாண். வழியே தெய்வ நெறி பெற்றவர்களாகின்றோம். பாரியும், பேகனும், வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ள லாரும், சிறுத்தொண்டரும், கரிக்குருவியும், பன்றியும் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நெறிகளைக் கண்டோம். அப்படியே அன்று தொட்டு இன்று வரை தமிழிலும் பிற மொழிகளிலும் நல்லறிஞர் கூறிய - பாடிய சொல் லோவியங்களையும் கண்டோம். இதே வகையில் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு புதன்கிழமையிலும், கடந்த ப்ல ஆண்டுகளாக, நிர்வாண் நல்ல ச்ொற்பொழிவுகளைக்