பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அம்மையும் அப்பனும் இனி, அன்னை வேறு அத்தன் வேறா என்ற வினா எழும். இருவரும் ஒருவரே என்ற உண்மை மேலே காட்டிய அடியவர்தம் பாடல் வழியே தெளிவாகும். எனினும் இரண்டாகக் கூறுவது ஏன் ? இறைவன் ஒருவனே. அவன் ஆற்றலையே-சக்தியையே அன்னை என்று அழைப்பர். இந்திய நாட்டுப் பழம்பெருஞ் சமயங்கள் அனைத்தும் இந்த நெறியினைப் பற்றி வாழ் வனவே. நம் நாட்டுத் தெய்வங்களும், அவற்றின் வழி பாட்டு அமைப்புகளும் இவ்வுண்மையினையே காட்டு கின்றன. சிவபெருமான் சக்தியினை உடலில் பாதி யாகவே கொண்டுள்ளார்; திருமால் உயிர்களமாகிய மார்பிடைக் கொண்டுள்ளார். சொல்லிச் சொல்லி உயிர்களை-பிறவற்றை-பிறக்க வைக்கும் பிரமனோ அச்சொல்லின் பிறப்பிடமாகிய நாவிடையில் கொண்டுள் ளான். இவ்வாறு மும்மூர்த்திகளும் தாம் வேறு சக்தி வேறு என்று பிரித்துக் காணா வகையிலே அமைகின் றனர்; அமைந்து அருள் புரிகின்றனர். எனினும் உயிர்கள் நலம் கருதி-உயர்வு கருதி இரு நிலைகளும் பிரிந்து 'கானும் நெறியினையும் நாம் காண்கின்றோம். சூர பன்மனை அழிக்குமாறு தேவர்கள் வேண்ட, வரமளித்த யாம் அழிப்பது முறையன்று எனக் கூறி, தன் சக்தியையே வேலாக்கி முருகனிடம் இறைவன் தந்தான் என்பது புராண வரலாறு. அப்படியே பார்வதியாகவம், தாட்சாயணியாகவும், மீனாட்சியாகவும் அம்மை விண் னிலும் மண்ணிலும் தோன்றி வளர்ந்த வரலாறுகளை யும் காண்கின்றோம். எனவேதான் நம் தொடரிலும் 'அம்மை அடித்தால் என்றும், அப்பன் அடித்தால்' என்றும் இருவகை கிலையில் நிகழ்ச்சி அமைத்துள்ளோம். வள்ளலார் அம்மையப்பனாகவே ஆண்டவனைக் காணு கின்ற நிலையில், தன்னை அடித்தது போதும் அணைத் திடல் வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றார். ஆம் தாய் அடித்தால் தந்தை அணைப்பார்; தந்தை அடித்தால் தாய் அணைப்பாள் ஆனால் தனக்குத் தந்தை