பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 15 யாகவும் தாயாகவும் அம்பலவன் ஒருவனே உள்ளமை யால் அவன் அடிப்பதை நிறுத்தி, அல்லல் நீக்கி, அழியா இன்பம் தந்து அணைத்திட வேண்டும் எனக் கூறு கின்றார். இதோ அவர் வாக்கு. தடித்தவோர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள் தாயடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனித நீஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா இனி ஆற்றேன் (விண்ணப்பம்-6-ஆம் திருமுறை) எனவே ஒன்றாய் நின்ற இறைவன் உயிர்கள் பொருட்டு தேவையான காலத்து அம்மையாகவும் அப்ப னாகவும் மோறி மாறிக் காட்சி தருகின்றான். இவ்விரு வருக்கும் உள்ள தொடர்பினை மணிவாசகரும் குமர. குருபரரும் நன்கு காட்டுகின்றனர். அப்பனுக்கு அன்னை யாக-மனைவியாக மட்டுமன்றி, தாயாக-தங்கையாகமகளாகவும் இருக்கின்றார் என்கின்றனர். இதனால் இறைவன் நிலை நம் மனநிலையைக் கடந்து, துவாத சாந்த நிலை என்கின்ற பெருநிலையில் என்னென்ன வகையிலோ இருந்து இந்த அண்டகோளத்தையும் பிற அனைத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் அருள் புரிகின்றான் என்ற உண்மையினை நாம் உணர்தல் வேண்டும். 'கனகமார் கவின் செய்மன்றில் அனக நாடகற்கு எம்.அன்னை மனைவி தாய் தங்கை மகள்' - (சிதம்பர செய்யுட் கோவை) என்று குமரகுருபரரும்,