பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 அம்மையும் அப்பனும் மின்னிடைச் செந்துவர் வாய்க் கருங்கண் வெண்ணகைப் பண்அமர் மென் மொழியீர்! என்றுடை ஆரமுது எங்கள் அப்பன் எம்பெருமான் இமயான் மக்கட்குத் தன்னுடை கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம்ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடல் பூண்முலை மங்கை நல்லீர்! பொற்றிருச் சுண்ணம் இடித்தும் நாமே? (திருப்பொற்கண்ணம்) என்று மணிவாசகரும் பாடியுள்ளனர். இதன் வழியே நமக்கு மட்டும்மன்றி இறைவனாகிய அப்பனுக்கும் அவள் தாயாகின்றாள் என்பதை அறிதல் வேண்டும். அதனாலே நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் அம்மை யினை, இமையறு சிறப்பில் பழைமோள் குழவி' எனப் பாடிப் பரவிப் பரவசமுறுகிறார். . இத்தகைய அன்னையானவள் பல்வேறு வகையில் இறைவனைப் பிரியாமலேயே பிரிந்த பாவனையில் வாழ்ந்த வரலாறுகள் பல. அவற்றுள் ஒன்று மதுரையில் தடாதகைப் பிராட்டியராகப் பிறந்து, வளர்ந்து, நாடாண்டு, பின் அனைத்தையும் அப்பனிடம் ஒப்படைத்த வரலாறு. பல நாடுகளையெல்லாம் வென்ற அன்னை மீனாட்சி வடக்கு நோக்கிக் கைலைமலைக்குச் சென்று, சிவனொடு பொர நினைக்கின்றாள். அவள்முன் இறைவன் தோன்ற அவரைக் கண்ட அன்னையின் நிலையினைப் பரஞ்சோதியார் அழகுபடக் காட்டுவார். 'ஒற்றைலார்கழற் சரணமும் பிரம்பசைத்து - உடுத்த வெம் புலித்தோலும் கொற்றை வாண்மழுக் கரகமும் வெண்ணிறணி கோலமும் நூல்மார்பும்