பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 17 கற்றைவேணியும் தன்னையே நோக்கிய கருணை செய்திடு நோக்கும் பெற்ற தன் வலப்பாதியைத் தடாதகைப் பிராட்டியும் எதிர்கண்டார். (45) என்று இருவரும் ஒன்று என்ற நிலையினைத் தள வலப் பாதி என்ற தொடரால் விளக்குகிறார். பின் இருவரும் மணப்பந்தலில் அமர்ந்திருந்த நிலையிலும் அவ்விருவரும் பிரிக்க முடியாத ஒருவரே என்பதை உறுதி செய்கின்றார். 'பண்ணும் இன்னிசையும் நீரும் தன்மையும் - பாலும் பாலில் நண்ணும் இன்சுவையும் பூவும் நாற்றமும் . மணியும் அங்கேழ் வண்ணமும் வேறுவேறு வடிவுகொண்டு இருந்தால் & 影,多,爱,é ஒத்தது அண்ணலும் உலகம் ஈன்ற அன்னையும் இருந்த தம்மா! (திருமணம் 174) என்று பிரிக்க முடியா இருபொருள்களின் நிலைகளை யெல்லாம் விளக்கி அந்த வகையில் அமைந்த அம்மை யப்பர் உருவினை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார். அவ்வாறு குறிக்கும்போது, அன்னையை உலகம் ஈன்ற அன்னையென்ற தொடரால் விளக்குகின்றார். எனவே இறைவனாகிய பரப்பிரமம் அமைதியாக யாண்டும் நிலவி நிற்க, அவர் கூறாகிய சக்தி' எனும் அருளே உலகை ஆக்கி ஆக்கிக் காத்துக் கரந்து அடக்கும் பெருஞ்' செயலைச் செய்கின்றது என்பதையும் தெளிய வைக் கிறார். இந்த அன்னையைச் சத்தியமாகவே காண்கின்றான் தருமனின் தம்பி சகாதேவன்.