பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மை அடித்தால் 19 யார், இறைவனால் அம்மையே என்றும் அழைக்கப் பெற்றமையினால்தான் அம்மையார்’ ஆனார். கயிலை நோக்கி வரும் பேயுருவம் தாங்கிய அவரை யார் என்று பக்கத்திலிருந்த சக்தி கேட்க, இறைவன் பதில் சொல்லு கிறார், 'வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப் பெருமைகொள் வடிவுவேண்டிப் பெற்றனர் என்று பிள்னை அருகுவந்து அணைய நோக்கி அம்மையே என்றும் செம்மை ஒரு மொழி உலகமெல்லாம் உய்யவே அருளிச் செய்தார் (பெரியபுராணம்) எனவே இறைவனுக்கு முன் காட்டியபடி பார்வதி அன்றி வேறு அன்பால் வழிபட்ட அம்மையும் உளரானார் அல்லரோ! - இனி, இறைவனைக் குழந்தையாக்கிப் பாடியும் பரவி யும் பாதுகாத்தும் நிற்கின்ற பக்தர்களும் உள்ளனர். குலசேகர ஆழ்வார் தாமே தாயாகி இராமனையும் கண்ணனையும் தாலாட்டுகின்றார். மன்னுடிகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய், செம்பொன்சேர் கன்னிநன்மா மணிமுடிசேர் கணபுரத்தெம் கருமணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ' என்று இராமனையும், ஆளைநீர் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத்தடம் கண்ணினன் தாலோ