பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 21 என்று காட்டுகின்றார். எனவே இறைவன் தானே அன்னையாவதோடு, அன்பரை அன்னையாக அழைப் பதும் அன்னையாகக் கொள்வதும் உண்டு என அறிதல் வேண்டும். இனி இந்த அன்னையே யாவுமாகிறாள் என்பதைப் பாரதியார் காட்டும் வழியில் கண்டு மேலே செல்வோம். அவரே-காளியாகியும் பிற உருவத்தராகியும் தோற்றம் அளித்தும் அவளாக நின்றும் அருள்புரிவதைப் பலப்பல வகையில் பலப்பல பாடல்களில் பாரதியார் விளக்கு கின்றார். அவற்றுள் ஒன்றிரண்டினை மட்டும் இங்கே காணலாம். 'யாதுமாகி நின்றாய் காளி-எங்கும் நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம்--காளி-தெய்வலீலை யன்றோ! பூதம் ஐந்து மானாய்-காளி-பொறிகள் ஐந்துமானாய் போதமாகி நின்றாய்-காளி-பொறியை விஞ்சி நின்றாய் யாதுமாகி நின்றாய்-காளி-எங்கும்நீ நிறைந்தாய் தீது நன்மை எல்லாம்-நின்றன்-செயல்கள் அன்றி இல்லை போதும் இங்குமாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை எல்லாம் ஆதிசக்தி தாயே-என்றும்-அருள்புரிந்து - காப்பாய்: என்றும், சத்கி தனக்கே அடிமையாக்கு-அது சத்திய நல் மெய்க் கொடியை நாட்டும்’ என்றும்,