பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 23 வயப்பட்டதாகவே இருக்கும். ஆம்! இப்பிறவியின் தாய், என்றென்றும் உயிர் பிறக்கும் தொறும் நமக்குத் தாயாக மாட்டாள். . எனக்குத் தாயாகியாள் என்னை ஈங்கு இட்டுத் தனக்குத் தாய்நாடியே சென்றாள்-தனக்குத் தாய் ஆகியவளும் அதுவானால் தாய் தாய்க் கொண்டு ஏகும் அளித்து இவ்வுலகு என்ற பாடலின்படி நம் தாய் தனக்கு வேறு தாயை நாடி வேறு பிறவிக்குச் செல்லுகின்றாள். அவளைப் பெற்ற அந்தத் தாயும் அவ்வாறே அவளுக்கு வேறு தாய் நாடிச் செல்கின்றாள். எனவே நிலையற்ற இந்தத் தாயே தன் மகன் தவறினை அடித்துத் திருத்துகிறாள் என்றால், அனைத்துலகுக்கும் என்றும் தாயாகிய தயாபரி அடிக் கிறாள் என்றால் நாம் திருந்துவதற்குத்தானே? குலசேகர ஆழ்வார், அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றயர்தன் அருள் நினைந்து அழும்குழவி அதுவே போன்று இருந்தேனே என்கிறார். அரிசினம் பெறுதற்கரிய நல்ல சினம், திருத்த உதவும் சினம், கருணையோடு கூடிய சினம் எனப் பல வகையில் பொருள் கொள்வர். ஈடு இதன் சிறப்பை நன்கு விளக்குகின்றது. அவ்வாறு கருணை உள்ளத்தோடு, தாய் துரே போ' என அதட்டி அகற்றினாலும், அடித் தாலும் அக்குழந்தை, அன்னையின் அருள நினைத்து அழுதுகொண்டே அவளைப் பற்றி நிற்கும் காட்சி உலகில் நாடொறும் நாம் காணும் காட்சியாகும். எனவே குலசேகரர் இந்த உவமையைக் காட்டுகிறார். குழந்தைக்கு தாய் மருந்து கொடுக்கிறாள் என்றால் அதன் கசப் பினைத் தாங்காது குழந்தை அழுவது இயல்பு. ஆனால்