பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அம்மையும் அப்பனும் தாய் விடுவாளா? தன் குழந்தை நலமுற்று வாழ வேண்டும் என்பதல்லவா அவள் குறிக்கோள். அன்னை அடித்தாயினும் அம்மருந்தை ஊட்டுவாள். அப்படியே குழந்தை-பெற்ற மகன் பிழை செய்வானேயானால் அடித்துத் திருத்துவாள் நான் ஒரு குடிக்கு ஒரு மைந்தன் ஆயினும் என் அன்னை என்னை அடித்துத் திருத்தி, பின் அணைத்து மகிழ்வாள். ஒருமுறை பெருந்தவறு செய் திருப்பேன் என எண்ணுகிறேன். கரண்டியைப் பழுக்கக் காய்ச்சிக் கையில் சூடும் வைத்தாள். ஆம்! அந்த வடு இன்றும் என் கையில் உள்ளது. அன்று அவர் அப்படிக் சூடிட்ட போது நான் அலறி இருப்பேன். அன்னையைப் பழித்து மிருப்பேன். ஆனால் அவள் அடியும் சூடும்தான் என்னை மனிதனாக்கின. இன்று உங்கள் முன் நின்று பேச வைக்கின்றன. இன்றேல் எங்கோ எப்படியோ ஊரில் சுற்றித் திரிந்து என்றோ மறைந்திருப்பேன். ஆம்! அவள் தன் அறக்கருணை, மறக்கருணை கலந்த செயல் களை எண்ணியே இன்று அவர் பெயரால் வள்ளியம்மாள் அறக்கட்டளை அமைத்து, பள்ளிகளையும், கல்லூரி யினையும் நடத்தி வருகின்றேன்; அவர்களை நினைந்து வெள்ளம் விடு தூது’ என்ற நூலினையும் பிற பாடல் களையும் பாடியுள்ளேன். இன்றும் அவர்கள் வழி நடந்த, அவர்கள் வழி ஆண்டவன்-அம்மை அருள் கொழிக்கவே நான் என் செயல்கள் அனைத்தையும் செய்வதாக நம்பு கிறேன், நம்பி வாழ்கின்றேன். இறைவா! இதுபோல நீ என்னை அடித்தாலும் தண்டித்தாலும் உன் அருள் நினைத்து உன்னைப் பற்றிக் கொண்டு இருப்பேன் என்கின்றார் ஆழ்வார். அவர்தம் திருவித்துவக்கோடு' என்றும் தலத்தைப் பற்றிய பதிகப் பாடல் ஒவ்வொன்றும் இத்தகைய உவமை காட்டி, உற்ற இறைவனைப் பற்றி வாழும் உயிர்த் தன்மையைச் சுட்டுவதாகும். எனவே இப்பிறவியில் வந்த அன்னை யிலும் ஆயிரமாயிரம் மடங்கு உயர்ந்த, என்றும்