பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அம்மையும் அப்பனும் தன் நிழல் அமைக்க, அன்னை திருவுளம் கொண்டு வெற்றி பெற்ற நாளே தீபாவளி. அவன் தன் பெயரும் அன்னையின் அருளும் என்றென்றும் நிலைக்க வேண்டும் என வரம் வேண்ட, அப்படியே நரக சதுர்த்தசி என்று அந்நாளை அமைத்து, உலகம் உள்ளளவும் அன்னையின் அருள் கருணை விளங்கச் செய்த சிறப்புப் போற்றுதற் குரியதன்றோ! ஆம்! அந்நாளில் அவன் அழியவில்லை; அன்னையின் கழலடைந்து என்றென்றும் நாமெலாம் நினைக்க வாழ்கின்றான். முன்கண்ட மகிஷாசூரனும் அப்படியே! அவன் வாகனமாக அமைந்து, அவள் ஊர்ந்து உலாவரும் நிலையில் அன்னையுடன் ஒன்றியே வாழ்கின்றான். எனவே அன்னை அடித்தாலும் அதனால் அடிபட்டவருக்கு மட்டுமன்றி அவனி முழுதுக்குமே நலம் விளையும் என்பதை எண்ணி மகிழ வேண்டுமன்றோ! இனி அன்னையின் சீற்றம் பற்றியும், அடித்தலைப் பற்றியும் முடிவில் கருணை பொழிவதைப் பற்றியும் இரண்டொரு நிகழ்ச்சிகளைக் காணலாம். அம்மை தக்கனுக்கு மகளாகப் பிறந்து தாட்சாயணி என்னும் திருப்பெயரோடு இறைவனைக் கலந்தாள். எனினும் தக்கன் சிவனோடு மாறுபட்டான். சிவனை எதற்கும் ஒதுக்கினான் அவன் ஒரு பெரும் யாகம் செய் தான். அதற்குச் சிவனைத் தவிர, மற்றவர் அனைவரை யும் அழைத்தான் சிவன் அதுபற்றிக் கவலைப்பட வில்லை. ஆனால் உமையோ தன் தந்தையின் யாகத் துக்குச் செல்ல விழைந்தாள். இறைவன் மறுத்தும், அன்னை செல்ல இசைந்தமையால் செல்லுக' என்று அனுப்பினான். இருவருக்கு மிடையே என்ன நடக்கப் போகும் என்பது தெரியும். அதுதானே இறைத்தன்மை. எனினும் உமை அப்படிச் செல்ல விழைந்தமைக்குக் காரணம் இறைவனின்றி யாகம் நடைபெறக் கூடாது என்பதேயாகும். அதைத் தடுக்கத் தான் ஒரு காரணமாககருவியாக வினைப்பட்டாள்; அவ்வளவே!