பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை. அடித்தால் 29 உய்ந்து முறைபோல் உயிர்பெற்று எழுவகையான் இந்த வரமும் எனக்கருளாய் எம்கோவே. (142) என வரம் வேண்டுகிறாள். இறைவனும் வீரபத்திரன் வழி அனைவரையும் எழுப்புகிறார். எனினும் எல்லாவற் றிற்கும் மூல காரணமாய் நின்ற தக்கனைத் தண்டிக்க நினைத்தார்-அழிக்க அன்று. அவன் தலை காணாமற் போகச் செய்தார். பதிலாக ஆட்டுத் தலையை எடுத்து அவன் உடலில் பொருத்தி வாழ வைத்தார். எழுந்த தக்கன் இறைவனைப் போற்றி வணங்குகிறான். 'அஞ்சலென்றருள லோடும், அசமுகத்தக்கன் . எங்கோன் செஞ்சரண் முன்னர்த்தாழ்ந்து தீயனேன் புரிந்த தீமை நெஞ்சினும் அளக்கொனாதால் நினைதொறும் சுடுவதையா உஞ்சனன் அவற்றைநீக்கி உனதருள் புரிந்த பண்பால்’ (160) என்பார் கச்சியப்பர் நீர் கிழிய எய்த வடுப்போல மாறுமே சீர்ஒழுகு சான்றோர் சினம்' என்று உலகச் சான்றோரைப் பற்றி ஒளவையார் கூறியுள்ளார். உலகுக் கெல்லாம் ஒருவனாய்-ஒருத்தியாய் நிற்கும் அந்த அம்மை அப்பர் சினம்-மக்களைக் காக்கவென முன் எழுந்த கோபம் மாறாதிருக்கும் கொல் ஆம்! சீற்றத்தோடு, தந்தையாயினும் தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற உண்மையை உணர்த்த அன்னையார் இந்த விளை யாட்டினைச் செய்து, பின் அனைவரையும் உயிர்ப்பித்துக் கருணை காட்டியருளினார்.