பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 அம்மையும் அப்பனும் இவ்வாறு அளவிலா விளையாட்டுடைய அன்னை யார் சீற்றமும் அடித்தலும் அவனிக்கும் அண்டத்துக்கும் நன்மையாக முடியும் நிலையினை அறிந்த வகையில் அமைய, உலகில் மானுடராக வாழ்ந்த அன்னையர்தம் சீற்றத்தினையும் அதனால் உலகு பெற்ற மாற்றத்தினை யும் ஒரு சிறிதளவு கண்டு இன்றைய விளக்கத்தினை முடிக்கலாம் என எண்ணுகிறேன். உலகில் எத்தனையோ சம்பவங்கள் பெரிதும் சிறிதுமாக நாள்தோறும் நடை பெறுகின்றன-எனினும் அவற்றையெல்லாம் யாரும் ஏட்டில் எழுதி வைப்பதில்ல்ை. நாட்டைக் காக்கும் நல்லரசர்களும், அமைச்சர்களும், பிறரும் தவறுவார் களாயின் அவர்தம் வரலாறு ஏட்டில் இடம்பெறும். சில காலத்துக்கு ஏற்ப மாறுபடுவதும் உண்டு. ஆங்கிலேயர் காலத்தில் நிகழ்ந்தவற்றை-அன்று எப்படி எழுதி இருந் தாலும், இன்று உரிமை பெற்றபின் மாற்றி எழுத வேண்டும் எனச் சிலர் கூறுகின்றார்க ளல்லவா? அந்த வகையில் மாற்றம் பெற்றோ பெறாமலோ சில பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய வரலாற்று இலக்கியங் கள் நமக்கு அக்காலத்திய நாட்டு நிலையினை நன்கு உணர்த்துகின்றன. அவற்றுள் வடநாட்டுக் காப்பி யங்கள்-தமிழில் மொழி பெயர்த்தவை-இராமாயணமும் பாரதமும், தென்னாட்டில் சிலப்பதிகாரமுமாகும். எனவே இவற்றின் வழியே இரண்டொன்று -அவை தோன்றுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த இரண்டொரு நிகழ்ச்சியைக் கண்டு அமையலாம். ஆம்! சூதாட்டமும் துகில் உரிதலும் இல்லையாயின் பாரதம் இல்லை. கைகேயி தன் மனம்மாறிக் கேட்ட இரு வரங்கள் இல்லையாயின் இராமாயணம் இல்லை. பாண்டியன் தவறு இல்லையாயின் சிலம்பு இல்லை எனவே இவை காணல் - இந்த அன்னையர்தம் சீற்றமும் அதன் மாற்றமும் காணல் இன்றைய தலைப்பிற்குப் பொருத்த மானதாகும் என எண்ணுகிறேன். எப்படி அன்னை