பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்மை அடித்தால் 31 பார்வதியின் சீற்றமும் செயலும் உலகுக்கும் ஊழிஊழிக் காலமாக மாறிவரும் அண்ட கோளத்துக்கும் கொடுமை யாகத் தோன்றினும் முடிவில் நலம் பய்ப்பதாக அமை கின்றதோ, அப்படியே இவர்தம் சீற்றமும் முடிவில் நாட்டுக்கு-உலகுக்கு, மறம் நீக்கி அறம் காக்கும் வகையில் அமைகின்றன. அவ்வாறு அமைவதாலேயே அவை என்றும் வாழும் காப்பியங்களாக நிலை பெற்றுள்ளன. பாண்டவரைச் சூதுக்கு அழைத்த துரியோதனன் அதன் வழி நாட்டையும் பிறவற்றையும் கவர்ந்த பின், பத்தினி திரெளபதியினையும் பணயம் வைக்கச் சொல்லி, அதிலும் அவன் வெற்றி கண்டான். எனவே அவளைத் தன் தம்பி வழி அரசவைக்கு அழைத்து வந்து அவள் துகில் உரிய முயல்கின்றான். கண்ணன் அருளால் அது நிற்ைவேறவில்லை அந்தச் சபையிலே திரெளபதி கூறுகிறாள், பாரதி தன் பாஞ்சாலி சபதத்தில் இதை அழகுற-அவள் உள்ளம் அவதியுறக் காட்டுகின்றான். பேயரசு செய்தால் பிணம்தின்னும் சாத்திரங்கள் மாயம் உணயாத மன்னவனைச் சூதாட வற்புறுத்திக் கேட்டதுதான் வஞ்சனையோ? நேர்மையோ? முற்படவே சூழ்ந்து முடிந்த பெருஞ்செய்கையோ? மண்டபம் நீர் கட்டியது மாநிலத்தைக் கொள்வதற்கோ? பெண்டிர் தமைஉடையீர்! பெண்களுடனே - பிறந்தீர்! பெண்பாவ மன்றே ! பெரியவசை s கொள்ளிரோ! கண்பார்க்க வேண்டும் என கதறிக் அழுதாள்