பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 33 'iமன் எழுந்துரை செய்வான்-இங்கு விண்ணவர் ஆணை பராசக்தி ஆணை தாமரைப் பூவினில் வந்தான்-மறை சாற்றிய தேவன் திருக்கழ லாணை மாமகளைக் கொண்ட தேவன்-எங்கள் மரபுக்குத் தேவன் கண்ணன் கழலாணை காமனைக் கண்ணழலாலே-சுட்டுக் காலனை வென்றவன் பொன்னடி ஆணை' என்று பராசக்தி மீதும் மும்மூர்த்திகள் மீதும் ஆணை யிட்டு அவன் கூறுகின்றான். ஆணையிட்டு இஃதுரை செய்வான்-இந்த ஆண்மையில்லாத் துரியோதன் தன்னை பேணும் பெருங்கனல் ஒத்தாள்-எங்கள் பெண்டு துரெளபதியைத் தொடைமீதில் நாணின்றி வந்திரு என்றான்-இந்த நாய் மகனாம் துரியோதன் தன்னை மாணற்ற மன்னர்கள் முன்னே-என்றன். வண்மையினால் யுத்த அரங்கத்தின் கண்ணே தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்-தம்பி சூரத்துச்சாதனன் தன்னையும் ஆங்கே கடைபட்ட தோள்களைப் பிய்ப்பேன்-அங்குக் கள்ளென ஊறும் இரத்தம் குடிப்பேன் நடைபெறும் காண்பீர் உலகீர்...இது நான் சொல்லும் வார்த்தை என் றெண்ணிட வேண்டா தடை யற்ற தெய்வத்தின் ஆணை-இது சாதனை செய்க பராசக்தி' என்று வஞ்சினம் கூறி முடிக்கின்றான். இவ்வாறு இருவர் ஆணைகளும் பராசக்தியின் துணையாகவே அமை கின்றன. உலகில் அநியாயம்-கொடுமை நிகழும் போதெல்லாம் அந்த அன்னையை அழைப்பதே மரபு.