பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் - 35 'அரசவையில் எனை ஏற்றி அஞ்சாமல் துகில் தீண்டி அளகம் தீண்டி - விரைசெய்அளி இளம்படித்தார் வேந்தெதிரே தகாதெனவே விளம்புவோரை பொருசமரின் முடிதுணித்து புலால் நாறு வெங்குருதி பொழிய வென்றி முரசறையும் பொழுதல்லால் விரித்த . குழல் இனிஎடுத்து முடியேன் என்றாள்' எனக் காட்டுவர். அதுகாலை நடந்த இயற்கையின் சீற்றத்தை (இன்று ஒரே வேளையில் நாட்டில் ஒரு பகுதி யில் பெருவெள்ளமும் ஒரு பகுதியில் குடிநீரும் இல்லாக் கொடுமையும் வராத இடமெல்லாம் பூகம்பம் வருவது போன்ற கொடுமையும் நிகழ்வதைப் போன்று) எடுத்துக் காட்டுகின்றார். மேகங்கள் வழங்காமல் விண் அதிர்ந்திட்டு ஊர் கோளும் வெயிலைச் சூழ்ந்து பூகம்பம் பிறந்து உருவும் அரும்பகலே விழுந்து உடனே பொய்கை வாடி யாகம் செய் நெடுஞ்சாலை யின்பாலும் செந்நீராய் இருந்த வேந்தர் ஆகங்கள் ஒளிமழுங்கிற்று, அவிதா என்று அணங்கனையாள் அழுத போதே’ - (1200) என்பது அவர் வாக்கு இவ்வாறு நாட்டில் உற்பாகங்கள் நிகழ்வதற்கு நாமே-சிறப்பாக ஆளுவோரே காரணமாக அமைகின்றனர் என்ற உண்மையினை இருவரும் எடுத்துக் காட்டியுள்ளனர். எவ்வழி நல்லவர் ஆடவர். அவ்வழி