பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் -- Ravidreamsbot (பேச்சு) 37 அரி, அரன், பூமேலோன் அகமலர் - மேன்மின்னும் விரிகதிர்ச் சோதி விளாக்காகியே நிற்பாய்' 'சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி செங்கண் அரிமால் சினவிடைமெய்

நின்றாயால் கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன்

பாகத்து மங்கை உருவாய் மறைஏத்தவே நிற்பாய்' என்று அன்னையின் ஆற்றலையும் அற நிலையினையும் அவள் அருட்சக்தியாகி மூவர்தம் உடனிருந்து படைத்துக் காத்து மறைந்து அருளும் திறத்தினையும் இளங்கோ வடிகள் விளக்கிக் காட்டுகின்றார். பின் பாண்டியன் முன் நிலையில் கண்ணகி கனல் உருவாய் நிற்கும்போது இவ்வன்னையின் சீற்ற உருவிலேயே காட்டுகின்றாள். பாண்டிய மன்னனின் வாயிற்காவல்ன் இக்கண்ணகியின் தோற்றத்தை அம்மன்னனிடம் கூறும்போது இவ்வன்னை யின் பல்வேறு.கோலங்களையே காட்டுகின்றான். - 'அடர்த்தெழு குருதி.அடங்காப் பசுந்துணி பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க் கிளைய நங்கை; இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு, சூருடைக் கானகம் உகந்த காளி, தாருகன் பேருரம் கிழ்த்த பெண்ணும் அல்லள்; செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழில் சிலம்பு ஒன்று ஏந்தியகையள்' (வழக்குரை காதை)