பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 39 அறம் காட்டி மறம் வென்ற கண்ணகி பின் உலகம் போற்றும் தெய்வமானாள். நம் கடற்கரையிலும் தலை விரித்து ஒற்றைச் சிலம்பேந்திய காட்சி இன்றும் நாம் காண உள்ளதன்றோ! அதைக் கண்டும்கூட நம் பெண் களுக்கு விரித்த கூந்தலை முடிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றவில்லையே! இது நாட்டிற்கு இனி வரும் பெருங் கேட்டினை உணர்த்துவதாகும்; உணர்ந்து அரசும் பிறரும் திருந்தினால் உண்டு. இன்றேல்-அந்த அவல நிலையை நான் சொல்ல வேண்டா? இனி, இத்துணைச் சிறப்பின்றாயினும்-துரெளபதி, கண்ணகி போன்று கடுஞ்சினத்தால் சபதமும்-சாபமும் இடவில்லையாயினும் தன் கணவனைப் பொய்யனாகா திருக்க, தான் பழியேற்று, சீற்றமடைவாள் போலத் தன்னைக் காட்டிய கைகேயிதன் நிலை கண்டு அமை வோம். - - இராமனுக்குப் பட்டம் என்பதை அறிந்த தோழிகூனி, கைகேயி தன்னுடன் கேகய நாட்டில் இருந்து வந்தவள்-அங்கே நடந்தவற்றையெல்லாம் நன்கு அறிந் தவள், கைகேயியிடம் வந்து உனக்கு இடர் வந்துள்ளது' என்கின்றாள். கைகேயியோ இராமனைப் பெற்ற எனக்கு இடர் உண்டாகுமோ!' என்று இராமனைத் தன் மகனாகவே கொண்டு, அவன் பட்டமேற்கும் செய்தி யினைக் கூறியபோது பரிசுகளை வழங்குகிறாள். நாயக மனையதோர் மாலை நல்கினாள்' என்பார் கம்பர். 'பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும் உலாவரும் துயர்விட்டு உறுதி காண்பரால் விராவரும் புவிக்கெலாம் வேதமே என இராமனைப் பயந்த எற்கு இடருண்டோ’ (மந்தரை சூழ்ச்சி 54)