பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அம்மையும் அப்பனும் இரக்கம் இன்மையன்றோ இன்று இவ்வுலகங்கள் இராமன் பரக்கும் தொல்புகழ் அமுதினைப் பருகுகின்றதுவே. என்று அவளைத் துரமொழி மடமான்' என உயர்த்தி, அவள் மாற்றம் அரக்கர் பாவமும் தேவர் அறமுமே காரணமாயினமையும் காட்டுகின்றார். இது எவ்வளவு உண்மை. அன்னையாகிய கைகேயி தன் (பொய்ச்) சீற்றத்தால் அரக்கர் அழிய நாடும் உலகமும் உய்ந்தன. நமக்கும் பெரிய இராமகாவியம் கிடைத்தது. அத்தகைய கைகேயி தன் செயலால் எப்படி வெற்றி பெற்றாள் என்பதைக் கண்டு அமைவோம். அவள் மன்னவன் உயிர் போன்றவள். அவள் வாட அவன் வாழ்வானா! வாடுவான். எனவே அவன் வரும்போதுவந்து அணைத்த போது, நின்று தொடர்ந்த நெடுங்கை தனை நீக்கி மின்துவள் கின்றதுபோல் மண்ணினிடை வீழ்ந்தான் ஒன்றும் இயம்பலள் நீடுஉயிர்த்தல் உற்றாள் மன்றல் அருந்தொடை மன்னவன் ஆவி . அன்னாள்: (கைகேயி சூழ்வினை 8) தசரதன் காரணம் கேட்ட போதும், எதுவும் தருவதாகச் சொன்ன போதும், . வண்டுளர் தாரவன் வாய்மை கேட்டமங்கை கொண்ட நெடுங்கண் ஆவிகொங்கை சோர