பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அம்மையும் அப்பனும் இவ்வாறு இந்நாட்டில் மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும், பல சமயங்கள்-இலக்கியங்கள்-வரலாறு 'கள் காட்டுவது போன்று அன்னையின் கடிதோச்சி மெல்ல எறியும் அடி பற்றிய செய்திகள் பலப் பல உள்ளன. நம் புராண காலங்கள் தொடங்கி, அண்ணல் காந்தியடிகள் காலம் வரை நல்லவர் அடிக்க-அடிபட அதனால் விளையும் பயன்கள் உலகுக்கும், அண்ட வாழ் விற்கும் அரணாக-நலம் பிறப்பதாக அமையும் என்பதை தாம் உணர்ந்ததால் மகிழ்வார்! ஆம்! மகிழ்ந்தார் அப்பர். இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்றும் பாடினார். மணிவாசகர், 'அடித்தடித்து அக்காரமுன் திற்றிய அற்புதம்' என்று இதைப் பாராட்டுகின்றார். நல்லார் அடிக்க நாடு நலமுறும்! அல்லார் செய்தால்கொடுஞ்சொல் சொன்னால் நாடு என்னாகும்? இத்தகைய நிலையில்-நெடிது நினைத்துப் பார்க்கை யில் மாரி-பராசக்தி-துர்க்கை-காளி-கொற்றவை எனப் பல வகையில் அழைக்கப்பெறும் அன்னையார்அம்மையார் அடித்ததால் அவனி செழித்தது-செழிக் கின்றது-அண்டம் சுழல்கின்றது-பாவம் நீங்குகிறதுபழி அகல்கின்றது-உயிர் நலமுறுகின்றது அந்த அன்னை யின் அங்கமாகிய நம் இலக்கியங்களின் சீற்றங்களும்அடிகளும் அவ்வாறே நலம் தருகின்றன. அத்னாலேயே ஆத்தகைய அறும் வளர்த்த அன்னையை இழைஅணி சிற்ப்பிற் பழையோளை, உலகம் போற்றி வணங்குகிறது. கிராமங்களில் மாரியாய் - நகரங்கள்ல் காமர் ட் இ, மீனாட்சி, விசாலாட்சியாய்-இலக்குமியாய்-பத்மாவதி யாய் பல வகையில் இறைவனோடு ஆடல் கொண்டு அருளிய அணங்கு நமக்குக் காட்சி தந்து நம்மை அடித்தும் அணைத்தும் ஆட்கொண்டு அருளுகிறாள். அவள் அருள் வழி நின்று. நாம் வாழ வேண்டும் ஆடித் தாலும் நன்மைக்கே என்று உணர வேண்டும் அடிக்கும் கையால் அனைத்துக் காப்பாற்றுவாள் என்ற உறுதி" யோடு, வாழ வேண்டும். ஆம்! அந்த உணர்வோடு என் ஈன்ற அன்னையினையும், உலக மாதாவாகிய அன்னை யையும் வணங்கி இன்றைய பொழிவினை முடித்துக் கொள்ளுகிறேன். - -