பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(2) 11–8–93 அப்பன் அடித்தால் பெரியோர்களே! 'அம்மையும் அப்பனும் என்ற பொதுத் தலைப்பில் சென்ற வாரம் அம்மை அடித்தால் என்னாகும் எனக் கண்டோம். இன்று அப்பன் அடித்தால் என்னாகும் எனக் காண வேண்டும். நான் அன்றே சொல்லியபடி 'அம்மையும் அப்பனும் வேறு வேறு என்று கொள்ள வேண்டுவதில்லை என்றாலும் அம்மை அப்பன்ாக உள்ள இறைவனை இருகூறாக்கி ஒன்றை மூல கர்த்தாவாகவும் மற்றொன்றைச் சக்தியாகவும் கொள்ளுகிறோம். நாம் எப்படிக் கொண்டாலும் இரண்டும் ஒன்றாக உள்ளமை உணர்கின்றோம்.இந்த ஈருருவினையும் இறையின் தன்மை யினையும் அவன் தம்மை வந்து ஆட்கொண்ட நிலை யினையும் வள்ளலார் அழகுறக் காட்டுகின்றார். 'ஒருமையிலே இருமைஎன உருக்காட்டிப் பொதுவில் ஒளிநடம் செய்தருளுகின்ற உபயபதம் வருந்த அருமையிலே நடந்து எளியேன் இருக்குமிடத் தடைந்தே அணிக்கதவம் திறப்பித்துஎன் அங்கையிலொன் றளித்து