பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அம்மையும் அப்பனும் 'பெருமையிலே பிறங்குக நீ எனத் திருவாய் மலர்ந்த பெருங் கருணைக்கடலே நின்பெற்றியை என்சொல்வேன் கருமையிலே நெடுங்காலம் கலந்து கலக்குற்ற கலக்க மெலாம் தவிர்த்து எம்மைக் காத்தருளும் பதியே' (4-ம் திருமுறை-அருட்பிரகாச மாலை 33) சிவன் உடலில் பாதியை உமைக்குத் தந்துள்ளான்; திருமால் மார்பைத் தந்துள்ளான்; பிரமன் நாவைத் தந்துள்ளான். எனவே பிரிக்க முடியாத நிலையில் உள்ள சக்தியைப் பிரித்து, ஆணும் பெண்ணும் இணைந்ததே ஆண்டவன் உருவம் எனக் காண்கின்றோம். கயிலைக் காட்சியினைக் காணச் சென்ற அப்பர் பெரு மானை-நாவுக்கரசரை இறைவன் அங்குள்ள குளத்தில் மூழ்கச் செய்தார். அவர் எழும்போது, ஐயாற்றங் கரையில்-திருவையாற்றில் நின்றிருந்தார். எ தி ரி ல் கயிலைக் காட்சி அமைந்தது. ஆம்! அக்கயிலைக் காட்சி யினை அப்பர், அம்மையப்பராக-ஆனும் பெண்ணு மாகவே காண்கின்றார். காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன், கோழி பெட்டையோடாடிக் குளிர்ந்து வருவன கண்டேன் வரிக்குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன்' என்று பிடியும் களிறும் சேர்ந்த காட்சியை-பெட்டையும் சேவலும் சேர்ந்த காட்சியை-ஆண் குயிலும் பெண் குயிலும் இணைந்த காட்சியினை நமக்குக் காட்டுகின்றார். எனவே யாண்டும் நீக்கமற நிறைகின்ற இறைவன் அப்பனாகவும் அம்மை யாகவும் அமைந்து காட்சி தருவதால், நாமும் அவ்வழி யில் அன்று அம்மையைக் கண்ட நெறிவழியே இன்று அப்பனைக் காணலாம். சக்தியாகிச் சிவம்ாகித் தனிப்பர முத்தியான முதல்) என்று கூறியபடி முன்னே சக்தியைக்