பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆந்திர மாநில உயர்நீதி மன்றத்தின் தலைமை நடுவரும் சென்னை நிர்வாண் சங்கத்தின் புரவலருமான மாண்பமை உயர்திரு S. நயனார் சுந்தரம் அவர்கள் வழங்கிய

முன்னுரை

________

முன்னுரை தருவது அவ்வளவு எளிதான காரியம் அன்று. அணு அணுவாகச் சேகரித்து அள்ளிக் கொடுத்திருக்கும் ஆசிரியரின் கருத்துகளை உருக்குலைத்து, சிதைத்து, தன் பெருமைகளை வெளிப்படுத்துவதாக இருக்கக் கூடாது முன்னுரை. ஒரு கழைக் கூத்தாடியின் வித்தை போலிருக்க வேண்டும் முன்னுரை. இது என் கருத்து. முன்னுரை தருமாறு எனக்குக் கட்டளையிட்ட பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், காலம் சென்ற என் தந்தையின் நண்பர்; எனக்கு ஆசான் போன்றவர். அவரின் அருமை பெருமையை நான் மறந்து விடக்கூடாது. அவர் நமக்குப் பகிர்ந்தளிக்கும் கருத்துகளின் பலனை முன்னுக்கு வைக்க வேண்டும். அதே சமயத்தில் டாம்பீகம் இல்லாமல் இந்தக் கருத்துப் பரிமாறல்களுக்குக் காரணமாயிருந்த நிர்வாண் அமைப்பினையும்-இந்த அமைப்பிற்கு நான் போஷகர்-புரவலர் என்று பட்டம் பெற்றவன் என்ற பெருமையையும் சற்று இலை மறை காய் மறைவாக வெளிப்படுத்த வேண்டும். அதனால்தான் முன்னுரை ஒரு கழைக் கூத்தாடி வித்தை என்றேன்.

ஒரு பிடி இருக்கட்டுமே, அல்லது ஒரு படி இருக்கட்டுமே-மாவை ஆக்கி, அமுது படைக்கும் இல்லத்தரசியிடம் கொடுத்தால் அவள் அப்பம் சுடுவாள்; ஆப்பம் சுடுவாள். ரொட்டி சுடுவாள்; தேன்குழல் இடுவாள்; முறுக்கும் சுடுவாள். சீடையும் போடுவாள். கை தேர்ந்த சமையல்காரி அல்லவா. ஒரு கருத்தை அள்ளிக் கொடுத்