பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அம்மையும் அப்பனும் யெல்லாம் தவம் செய்த மணல் இலிங்கத்துக்கு அபிடேகம் செய்ய, அது கண்ட அவர் தந்தை, அச்சிவலிங்கத்தைக் காலால் உதைத்துத் தள்ளினார். அது பொறாத அன்பர் தந்தை என்றும் பாராது அவர் காலை துணித்து இறைவனை அணைக்க, இறைவன் செயலை, 'அடுத்த தந்தை இனிஉனக்கு யாமென்றருள் செய்து அணைத்தருள மடுத்த கருணையால் தடவி உச்சிமோந்து மகிழ்ந்தருள’ என்று சேக்கிழார் அழகுறக் காட்டுகின்றார். அது மட்டு மன்றி இறைவனை வழிபடுவோர்க்கு அருள் செய்யும் பெற்றியினை அவருக்குத் தந்து, தன்மேல் இடும் திருமாலியமாகிய அன்பர்சூடும் மலர் இதழ்களை அவருக்கு இட்டு வணங்கி, வரம் பெறுமாறு நம்மையெல்லாம் ஆற்றுப்படுத்துகின்றார். குமரகுருபரர் இவர் பெருமையைச் சிதம்பர செய்யுட் கோவையில் நன்கு விளக்குகிறார். தில்லை அம்பலவன் வழியில் வலம் வர, அவனைக் கண்டு மையலுள்ள மகள், அவன் மாலை வேண்டிக் கேட்க, அன்னையார், 'தன் தந்தை தாள் எறிந்தார்க் கன்றித் தாரா' னென்று கூற, அத்தலைவி பகை நோக்களித்தாள்.என்று பாடுகின்றார். ஆக உலகில் யாருக்கும் இல்லாப் பெரு நிலையைத் தானே தந்தையாகி, சண்டேச்சுரருக்குச் சிறப்பினைத் தந்துள்ளார். நம் அப்பர். அப்படியே மதுரைச் சுந்தரர் மாமனாக வந்து வழக்குரைத்து, தன் தங்கை யினையும் அவள் மகனையும் காத்தார் எனக் காண் கின்றோம். எனவே அன்புடையாருக்கு அப்பனாய்மாமனாய்-மற்ற வகையாய் வந்து அருள்புரிவான் என்பதைக் காண முடிகிறது. இத்தகைய அருளுருவாய அப்பனும் அடிப்பானோ! ஆம்! அடிப்பான்! எப்போது? காண்போம். -