பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்நாம் 49 அவன் அடிப்பதைக் காணுமுன் அவன் தன்மை யினைக் காணல் ஏற்புடைத்தாகும். அவன் தன்மையைப் பற்றி அன்றும், இன்று தொடக்கத்திலும் ஓரளவு கண்டோம். அவனே அனைத்துமாய் அங்கிங்கெனாதபடி எங்கும். நிறைந்துள்ள தன்மையினை மெய்யடியார்தம் பாடல்கள் வழியே காணலாம். பூதங்கள் ஐந்தாகிப் பொறியாகிப் புலனாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையன்’ என்றார் மாணிக்கவாசகர். முன் தாயைப் பற்றிச் சொல்லிய த போலவே, இங்கே நம் உலகத் தந்தை நம்மைவிட்டு மற்றொரு தந்தையை நாடிச் செல்வதையும் அந்த மரபு எவ்வாறு தொடர்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். 'எந்தை தந்தை தந்தை தன்மூத்தப்பன் g ஏழ்படிக்கால் தொடங்கி என்றும் 'எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கு - முநதை என்றும் ஆழ்வார் பாடித் தந்தை உறவு எப்படி எப்படி முறையாகச் செல்லுகிறது எனக் குறிக்கின்றார். இவ்வாறு இந்த உலகத் தந்தை மாறி மாறி வந்தாலும் ஒன்றான தந்தை-அம்மை அப்பனாகிய ஆண்டவன் ஒருவனே என்பதையும் அவன் நம்மை அடித்தும் அணைத்தும் அருள்புரிகின்றவன் என்பதையும் அவன் என்றும் நம்மை விட்டுப் பிரியாமல், என்றும் உடன் இருப்பவன் என்பதை யும் நன்கு உணர வேண்டும். -