பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அம்மையும் அப்படும் திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து' எனத் திருப்பதியில் இணைந்த உருவினைக் கண்டு பாடு கின்றனர். ஆய்ந்து நோக்கில் மணிவாசகர் தென்னா டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனக் கூறியாங்கு எச்சமயத்தோரும் வழிபடும் தெய்வம் ஒன்றேயாகும். நம் தமிழ்நாட்டின் தென்கோடி யில் உள்ள சுசீந்திரம் என்னும் ஊரில் இறைவனைத் தானுமாலவன்' என்றே அழைப்பர். மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகக் காட்சி தருவதால் அப்பெயரிட்டழைப் பர். தானு சிவனையும் மால் திருமாலையும் அயன் பிரமனையும் குறிப்பனவாம் இவ்வாறே பல இடங்களில் இறைவன் பலவகையில் பேசப் பெறினும் ஒருவனே என்ற உணர்வில் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த உண்மையினை உணராமையினாலேதான் இ ன் று நாட்டில் சமயத்தின் பேரால் மாறாட்டங்களும், போராட்டங்களும் நிகழ்கின்றன. பரந்த பாரதம் மூன்றாக்கப்பட்டது. மக்களாகப் பிறந்த நாம் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற உணர்வில் வாழ்ந் தால் நாடு நாடாகும்; நாமும் உய்வோம்! எங்கோ சென்று விட்டேன் மன்னியுங்கள்! இந்த இறைவன்-சிவன் உடலின் ஒரு பாகத்தில் உமையாகிய சக்தியைக் கொண்டுள்ளான் என்று அன்றும் கண்டோம்;. இன்றும் கண்டோம். இந்த உருவினைக் கண்ட குமரகுருபரருக்கு ஒர் எண்ணம் உருவாகின்றது. இந்த உமையொரு பாகனை அவன் அல்லது ஒருவன் என்பதா, அவள் அல்லது ஒருத்தி என்பதா என்ற எண்ணம் தோன்றுகிறது. தமிழ்ச் சொற்களை எண்ணிப் பார்க்கிறார்."ஒருவர் என்ற சொல் தமிழில் இருவரையும். இருபாலரையும் குறிக்க இருப்பதைக் காண்கின்றார்.