பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 53 உள்ளம் மகிழ்கின்றது; உதட்டில் பாடல் உருண்டோடி வருகிறது. 'அருவருக்கும் உலகவாழ்வு அடங்க - - நீத்தோர்க்கு ஆனந்தப் பெருவாழ்வாம் ஆடல் காட்ட மருஅருக்கன் மதிவளி வான் யமானன் தீநீர் மண்எனும் எண்வகை உறுப்பின் வடிவுகொண்ட ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உருவென்றால்இவ் உருவை இஃதொருத்தன் என்கோ - - ஒருத்தினன்கோ இருவருக்கு உரித்தாக ஒருவர் என்றோர் இயற்சொல் இலதெனில்யான் மற்று என்செய்கேனே (சிதம்பர செய்யுட் கோவை) அவர் வாக்கு. இவ்வாறு இருவர் இணைப்பு இருப்பது மட்டுமன்றி எல்லாமாகவும் அவன் இருக் கிறான் என்பதை மேல் இரண்டு அடிகள் காட்டுகின்றன. இவ்வாறாக இறைத்தன்மை பெற்ற அம்மையின் அருள் நலத்தை அன்று கண்டோம்! இன்று அப்பன் அருள் நலத்தைக் காண இருக்கின்றோம்! இந்த அப்பனாகிய இறைவன் எத்துணை கருணை யாளன் என்பதை முன்னர்க் காண்போம். திருவிளை யாடிலில் மாபாதகம் தீர்த்த படலம்' என்றொரு பகுதி உள்ளது. ஒருவன். தாயைப் பெண்டாகக் கொண்டு தகப்வனையும் வெட்டி விட்டு, ஊரை விட்டே மதுரை நோக்கிப் புறப்பட்டான். ஆனால் வழியில் கொள்ளைக் காரர்கள்.அவர்களை மறித்து, பொருள்களையும், தாயை யும் உடன் கொண்டு, அவனையும் அடித்துத் துரத்தி விட்டனர். அவன் மயங்கி, பீதியுற்று, அழுது, புலம்பி