பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 55 என இறைவனைக் கருணைமூர்த்தி என்றே காட்டி அவன் அருள் திறத்தினையும் அவர் வாக்காலேயே நமக்கு விளக்குகின்றார் பரஞ்சோதியார். அது கேட்ட அம்மை யும் அக்கருணை வள்ளலின் விளையாட்டினை வியந்து போற்றுகின்றார். நெய்தற் போதனைய உண்கண் நேரிழை "நீயாதொன்றும் செய்தற்கும் செய்யாமைக்கும் வெவ்வேறு செயற்கும் ஆற்றல் மெய்தக்க கருணைவள்ளல் வேண்டிய - . . . - - வினைஞரேனும் உய்தக்கோர் ஆதல் செய்வாய் உன்னருள் - . விளையாட்டன்றோ" (36) என்பது அன்னையின் வாக்கு. இவ்வாறு இறைவன் அருள் செய்யும் ஆடல்கள் பல திருவிளையாடற் புராணத்தும், பெரிய புராணத்தும், பிற இலக்கியங் களிலும் கூறப்பெறுகின்றன. இயேசு பெருமானும் நோயாளிக்கு வைத்தியன் தேவை என்று கூறிப் பாவி களை ரட்சித்தார் என்று விவிலிய நூல் சான்று பகர் கின்றது. அவ்வாறு பிற சமய நூல்களும் சகத் ரட்சக னான இறைவனை எண்ணற்ற வகையில் கருணை வள்ள லாகப் போற்றிப் புகழ்வதைக் காண்கிறோமே! அப்பனுடைய அருள் நிலையை, கரிக்குருவிக்கும், நாரைக்கும், பன்றிக்கும்கூட அருளிய பண்பைக் காட்டிப் பரஞ்சோதியார் பலவாறு நன்கு விளக்குகின்றார். இவை பற்றியெல்லாம், ஆன்மாவைப் பற்றி அறியும்போது, அடுத்த நாள் விளக்கமாகப் பார்ப்போம். இங்கே, எல்லா உயிருக்கும் கருணை புரியும் அப்பன் அடிப்பானா என்பதை மட்டும் நாம் அறிதல் வேண்டும். அடித்தடித்து அக்காரமுன் தீற்றிய அற்புதம் அறியேனே என்று