பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 _ _அம்ம்ைபும் அப்பமும் மணிவாசகர் கூறியபடி, அவன் அடித்துத் திருத்தி இனிப்பையே அளிப்பான் என்பதை உணர்ந்தால் அவன் அடியையே நாம் நாடி நிற்போம். களிப் பெல்ாம் மிகக் கலங்கிடுகின்றேன், கயிலை மாமலை மேவிய கடலே' என்று மணிவாசகரே காட்டியபடி இன்பம் வரின் கலங்கி, துன்பம் வரின் சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளும் மனப் பான்மை நமக்கு வேண்டும். வள்ளுவரும், 'இடுக்கண் வருங்கால் நகுக' என்கின்றார். அப்பரும் நினைந்துருகும் அடியாரை நைய வைத்தாய்' என்கிறார். நம்மாழ்வார் இதனை, 'நண்ணாதார் முறுவலிப்ப நல்உற்றார் . . கரைந்தேங்க எண்ணாறாத் துயர்விளைக்கும் இவைஎன்ன உலகியற்கை' என்கின்றார். இயேசு பெருமானும் துயரப்படுகிறவர் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது' என்கிறார். கம்பர் துன்பமுற்றவர்கலால் இன்பமில்லை' என்கின்றார். அவரே "துன்புள தெனினன்றோசுகமுளது. என்றும் காட்டுகிறார். - * வள்ளுவர், 'இடும்பைக்கு இடும்பைப்படுப்பர் ... " இடும்பைக்கு இடும்பைப் படாஅ தவர் என்கிறார். எனவே இறைவன் அடிப்பதெல்லாம் அவன் படைத்திஅவன் உற்றிருக்கின்ற அவனியும், அதில் வாழ் உயிர்களும் நலம் பெறுவதற்காகவேயாகும்! 'தம் புதல்வர்க் கன்றே பலகாலும் சொல்வர் பயன்' என்ற அடியும் இங்கே நினைவுகூரத் தக்கது. -