பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 57 அடியவர் பொருட்டாக ஆண்டவனாகிய அப்பன் மறத்தை மாய்ப்பான் வரமிருந்து பெற்று வளர்க்கப் பெற்ற் மார்க்கண்டேயர் பதினாறு வயதில் இறுதி எய்து வார் என அறிந்து, இறைவனைப் பற்றுக்கோடாக வழி பட்டு நின்றார். எனினும் காலன் குறித்த நாளில் அவர் உயிர் கொல்லப் புறப்பட்டான். காலம் தவறாமல் பணி யாற்றுவதனால்தானே அவன் காலன்' எனப் பெற்றான். ஆனால் மார்க்கண்டேயர் இறைவனை அகத்தும் புறத்தும் போற்றி அவனை அணைத்துக் கொண்டு தன்னை மறந்து நின்ற நிலையில் இறைவனையும் பிணைத்துப் பாசக்கயிற்றால் இழுக்க முயன்றான். அது தவறுதானே! மார்க்கண்டனைப் பிரித்து அவன் உயிரை எடுத்துச் செல்ல முயன்றால் இறைவன் என்ன செய்திருப் பானோ! நாமறியோம். ஆனால் பற்றுக பற்றற்றான் பற்றினை என்றபடி இறைவனை உளத்தாலும் உடலா லும் பற்றி நின்ற நிலையில் காலன் செயல் தவறு என்பதை உலகுக்கு உணர்த்தவும், என்றென்றும் அடியவர் மாட்டு அவலம் நிகழலாகாது என விளக்கவும் அவனைக் காலால் கடிந்தார். எனினும் அவனை அழிக்கவோ அன்றி வீழ்த்தவோ இல்லை. பின் அவன் பணியினைச் செய்ய அவனுக்கு ஆணை தந்தார். எனவே இந்த அப்பன் அடித்த அடி காலனுக்கு மட்டுமன்றி, காலந்தொறும் வாழும் நம் போன்ற உயிர்களுக்கும் பாடமாக அமை கின்றதன்றோ! அப்படியே காமனை எரித்த வரலாறும். சூரபதும னுடைய தொல்லையைப் பொறுக்கலாற்றாத தேவர்கள் பிரமன், விஷ்ணு முதலிய தெய்வங்களையெல்லாம் வணங்கி, இறுதியாகத் தவம் செய்திருந்த சிவனை அடுத்தனர். சிவன் ஏன்-எதற்காகத் தவம் செய்ய வேண்டும்? அவன் யோகியாகவும் போகியாகவும் இருக் கும் நிலையைக் காட்டவே தவநிலை கூறப் பெறுகின்றது. அ-4