பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 59 செம்பதுமத் திருக்குமரா தமியேனுக்கு ஆருயிரே திருமால்மைந்தா சம்பரனுக்கு ஒருபகைவா கன்னல்வரிச் சிலைபிடித்த தடக்கைiரா வெம்பவளக் குன்றனைய சிவன்விழியால் வெந்து உடலம் அழிவுற்றாயே? உம்பர்கள்தம் விழிளல்லாம் உறங்கிற்றோ அயனாரும் உவப்புற்றாரோ' என்று பாடுகிறார். இதில் கடைசியில் அயனாரும் உவப்புற்றாரோ என்கின்றார். இதன் கருத்தென்ன? அயனும் மன்மதனும் திருமாலின் பிள்ளைகள். பங்குக் குரிய பங்காளிகள். எனவே ஒருவன் மறைந்தால் முழுப் பங்கும் வாழும் ஒருவனைத்தானே சாரும். அதனால் அயனாகிய பிரமன் மகிழ்ந்தானோ என்கிறாள் இரதி. மேலும் மன்மதனைச் சிவனிடம் அனுப்பியவருள் முக்கிய மானவன் பிரமனாவான். இறைவன் இந்த அடியால் அவனை அழிக்கவில்லை. மறுபடியும் விழிக்க வைத்தார். அவனை எழுப்பித் தந்தார். இரதி தேவியின் வேண்டுகோளை நிறைவேற்றி னார். ஆனால் அவளுக்கு மட்டும் உருவனாகவும் மற்ற வர்களுக்கு அருவனாகவும் இருப்பான் என் வரம் தந்தார். ஆம்! தன் நிலையை அவனுக்குத் தந்தார். தன் அழிவில் ஆண்டவன் நிலை பெற்றான் மன்மதன். அன்பர்களுக்கு உருவில் வந்து காட்சி தந்தும் அல்லாதார்க்கு இல்லா நிலையிலும் இருந்து அனைவரையும் ஆட்டிப்படைக்கும் இறைவன் நிலையினை மன்மதன் பெற்றான். உற்ற அன்புடைய இரதிக்கு உருவுடையவனாகவும் அல்லா தார்க்கு அல்லா நிலையில் மறைந்து நின்று மல்ரம்பு எறிந்து அவர்களை வாழ்த்தி வாழ வைப்பவனாகவும் போக மளிப்பவனாகவும் உள்ளான் அன்றோ! இது அடித்து அணைப்பது அல்லவா! மேலும் அந்த மன்மதன்