பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 அம்மையும் அப்பனும் உருவொடு இருந்து, காம வாழ்வில் காதல் வாழ்வில் நிற்பார் எதிரில் வருவானாயின் என்னாகும்? காதல் நிகழுமோ? நிகழாதோ! எனவே இந்த இறைவனாம் அப்பன் அடியினால் மன்மதன் மட்டுமன்றி அனைத்து உயிர்களும் நலம் பெற்றன என்று தானே கூறல் வேண்டும். 'திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்' என்று சிறப்புப் பெயர் பெற்ற இறைவன் மும்மதிலை எரித்தவன் அல்லவா! ஆம்! அந்த வரலாறும் இந்த வகையில் அண்ட மெல்லாம் அல்லலற்று வாழ அமைந்த செயலேயாகும். அவர்களும் என்றென்றும் வாழ்கின்றனரன்றோ! போர் புரங்கள் எரித்த அன்று சிலர்க்கருள் செய்தான் என்று இதையே ஞானசம்பந்தர், தம் திருவண்ணாமலைப் பதிகத்தில் பாடியுள்ளார். தமக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவரும் இலர் என்று தருக்கி வாழ்வோரைத் தடுத்துத் திருத்த இறைவன் எப் போதும் தவறியதில்லை. எச்சமயத்தோர் சொல்லும் இதுவேயாகும். எப்பிறவி எடுப்பினும் அப்பிறவியில் ஆற்ற வேண்டிய அறநெறி பற்றி வாழ்வதுதான் உயிரின் தன்மை. புல்லாயினும் கல்லாயினும் புவியின் வேறு உயிருள்ள பொருள் எதுவாயினும் அவையாவும் தத்தம் கடமைகளைத் தவறாது செய்கின்றன. வனவிலங்குகளும் ஊரும் பாம்பும் பிறவும் கூடத் தம் செயல் முறையில் கூடு மான வரையில் தவறுவது இல்லை. மரபுநெறி அங்கெல் லாம் போற்றப் பெறுகின்றன. ஆனால் மனிதன்-அனைத் திலும் உயர்ந்தவன் எனத் தன்னை எண்ணிக் கொள்ளு கின்ற மனிதன்-ஆறறிவு பெற்ற மனிதன் தன் நிலையில் தவறுவதே வாழ்வாகக் கொள்ளுகின்றான். முந்திரிமேல் காணி மிகினும் கீழ் தன்னை இந்திரனாப் போற்றிவிடும்' என்று வள்ளுவன் கூறியபடி வன்கண்மையும் செருக்கும் மூடி மற்றவரைக்கெடுக்க - அழிக்க-பழிக்க முற்படு கிறான். இத்தகைய தன் முனைப்பு நிலையில்-தகாத