பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 63. செக்கர் அம்சடையான் கண்ணுள் தம்உருத் தெரிய நோக்கி இக்கொடியார் போல் கண்ணுள் எம்மையும் - இருத்தீர் என்றார் நக்கலும் தனை அன்னார்கண் நனிவர நகைத்து நம்மின் மிக்கவர் நும்கண் உள்ளார் விழித்தவர் காண்மின் என்றான்' என்ற பாடல்களில் வளை' என்பது சங்கு, கழுத்து போன்ற சங்கு எனவும், நடு என்பது நடுநிலை, இடை எனவும், விடை’ என்பது உத்தரவு, விடையாகிய திருமால் எனவும், கல்' என்பது கல் மலை போன்ற கொங்கை எனவும், கங்கை' என்பது கங்கை' எனவும் கபாலத்தைக் கையில் கொண்டது எனவும், செப்பு' என்பது சொல் எனவும் செம்பு போன்ற தனம் எனவும், 'கலை என்பது ஆடை எனவும் சந்திர கலை எனவும் இருபொருள் அமைந்துள்ளன. கடைசி பாட்டில் இறை வன் அவருள் இருப்பதை விழித்தறிய முடியாமல் வாடி யுள்ள நிலையினை விளக்குவதாகும். இவ்வாறு பேசிக் கொண்டே அப்பெண்கள் இறைவனைத் தொடர, தவசி களும் மோகினியாகிய திருமாலைப் பின் தொடர்ந்து வர, இரு கூட்டத்தினரையும் நேருக்கு நேர் நிற்க விட்டு, இரு வரும் மறைந்தனர். தவசிகளும் மங்கையரும் தத்தம் செய லால் நாணிக் கர்வம் அடங்கினர் என்பது வரலாறு. பெரிய புராணத்தில் வரும் நாயன்மார் வரலாறுகள் இறைவன் ஆட்கொண்ட வரலாறுகளே. அவற்றுள் சில அடித்து ஆட்கொண்டவையாக அமைகின்றன. அமைதி யாக அரனருள் போற்றித் தொண்டு செய்கின்றவரை அகிலமெலாம் அறியவைக்க வேண்டும் என்ற நிலையில் இறைவன் அடித்து ஆட்கொண்டுள்ளான். திருநீல கண்டர் தில்லையில் தம் குலத்தொழிலுக்கு ஏற்ப அடிய