பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 •យ៉១០ឃុំឃា அப்பனும் வர்களுக்குத் தொண்டு செய்து வந்தார். எனினும் வாழ் வின் மாறுபாட்டால் தம் துணைவியார், எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்' என்று ஆணையிட, இளமை முதல் அவரையும் எம்மை' என்றதால் வேறு எந்தப் பெண்ணையும் தொடாத விர்தம் பூண்டு, அதே வேளையில் உலகுக்குத் தெரியாவகையில் இல்லறத்தை நடத்தி வந்தார். இத்தகைய தூய தவ வாழ்க்கையினை உலகுக்கு உணர்த்த இறைவன் எண்ணினார். எனவே ஒரு பழைய திரு ஒட்டினை அவரிடம் தந்து, அதை வைத் திருக்குமாறும் பின்பு வந்து பெறுவதாகவும் கூறிச் சென் றார். பின் அத்திருவோட்டினையும் இல்லையாக மறைத்து விட்டார். மறுநாள் வந்து கேட்க, ஒடு இல்லை யாதலால், தாம் செய்த அரிய பல ஒடுகளைத் தருவதாக நாயனார் சொல்லவும் கேளாது தாம் தந்த ஒடே வேண்டு மென வாதிட்டார். இல்லையாயின் மனைவியின் கையைப் பிடித்து, அருகில் உள்ள குளத்தில் மூழ்கி, ஒடு காண வில்லை எனச் சத்தியம் செய்யச் சொன்னார். வாழ்விலே இளமை முதலே தாம் காத்த விரதத்தை வெளியே சொல்ல நாயனார் அஞ்சினார். உடனே இறைவன் தில்லை வாழ் அந்தணர் முன் சென்று முறையிட்டு, அவரைத் தம் மனைவி கைப்பிடித்துக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்யச் சொல்ல வேண்டினார். அந்தணனும் எந்தைபிரான் அருமறையோர் - முன் பகர்வான் இந்தவேட்கோ வன்பால் யான்வைத்த பாத்திரத்தைத் தந்தொழியான் கெடுத்தானேல் தன்மனைவி - கைப்பற்றி வந்துமூழ்கியும் தாரான் வலிசெய்கின்றான் என்றார்"