பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 65 எனச் சேக்கிழார் இறைவன் வழக்கிட்ட முறையினைச் சொல்லுகின்றார். பின் வயதான நாயனார் வேறு வழி யின்றித் தாம் வாழும் வாழ்வினைப் பற்றிச் சொல்ல நேர் கிறது. பின் மன்றத்தோர் கூற, ஒரு கோலை இருவரும் பிடித்துக் கொண்டு, குளத்தில் மூழ்கி எழுகின்றனர். அவர்கள் எழுந்தபோது, முதுமை மாறி இளமை பொலி யக் காட்சி அளிக்கின்றனர். வானில் இறைவனும் தன் உமையொடு தோன்றிக் காட்சி அளித்து அவர் புகழை உலகுக்குப் புலப்படுத்தி மறைந்தார். அவர்கள் மூழ்கி எழுந்த குளம் இன்றும் இளமையாக்கினார் குளம்' என்றும் இறைவன் கோயில் இளமையாக்கினார் கோயில்' என்றும் சிதம்பரத்தில் சிறப்புற உள்ளமை அனைவரும் அறிவர். இவ்வாறே பல அடியவர்தம் தூய தெய்வ வாழ்வினை உலகுக்குக் காட்டி அவர்களை என் றும் வாழவைக்கும் நிலையில் இறைவன் அடிப்பது போலக் காட்டி அணைக்கும் திறன் நூல் முழுவதும் காணலாம். திருநாவுக்கரசர் சைவசமயத்தை விட்டு, சமணமாம் சமயம் சார்தற்குச் சேக்கிழார் நம்பர் அருளாமையினால் அமண் சமயம் குறுகுவார்’ எனக் காட்டுவர். பின் அவருக்கு உண்டான பல்வேறு அடிகளும் அவரைத் தூயராகக் காட்டுவதற்கும் அவர் தம் தளரா உள்ளத்தை யும் இறைவனிடம் அசைக்க முடியாத நம்பிக்கையினைக் காட்டுவதற்கும் எனவே அமைந்தனவாம். நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்' என வீறுபேசிய அளவிற்கு இறைவன் அவரை அடித்து ஆட்கொண்டார். நீற்றரையில் இட்டதும், யானையை ஏவியதும், கடைசி யில் கல்லைக் கட்டிக் கடலிலே இட்டதும் இறைவன் தந்த அடிகளேயாம். கற்றுணைப் பூட்டி ஓர் கடலில் பாய்ச் சினும் நற்றுணையாவது நமசிவாயவே! இறைவன் திரு நாமத்தைப் பற்றி அவர் கரை ஏறினார். சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்