பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் té9 துரத்தி அடித்ததோடு, அப்பெருநகரையும் கைக் கொண்டு வெற்றியோடு திரும்பி வந்தவர். 'மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுரத்து வாதாபி தொன்னகரம் துகளாகத் துணைநெடுங்கை - வரை உகைத்தும் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னன எண்ணில கவர்ந்தே - இகலரசன்முன் கொணர்ந்தார்' (6) என்பார் சேக்கிழார். அங்கிருந்து பல பொருள்களைக் கொண்டுவந்ததோடு, அந்நாட்டு, இன்றை மராட்டிய நாட்டு-வழிபடு தெய்வமாகிய விநாயகரையும்-கணபதி யையும் உடன் கொண்டு வந்தார். திரும்பி வந்தவர் அரசுப் பணியை விடுத்து, ஆண்டவன் பணியே சிறந்த தெனக் கண்டு, தம் சொந்த ஊராகிய திருச்செங்காட்டங் குடிக்குச் சென்றார். உடன் தாம் கொண்டு வந்த கணபதி யினையும் அங்கே எடுத்துச் சென்று கோயில் அமைத்து, கணபதியையும் இறைவனையும் அமைத்து முறையாகக் குடும்பத்துடன் வழிபட்டு வந்தார். அத்திருக்கோயில் இன்றளவும் கணபதீச்சரம்' என்ற பெயரிலேயே போற்றப்பட்டு வருகின்றது. (அக்கோயிலின் ஒரு பகுதி வாதாபி அமைப்பை ஒட்டியதே என்பர் ஆய்வாளர்) அன்று முதல் தமிழ் நாட்டு இசையரங்குகளிலும் வாதாபி கணபதிம் பஜே என்றுதான் முழங்குகின்றனர். அத்த கைய பெரும் தொண்டு செய்த சிறுத்தொண்டரை இறை வன் சற்று வலுவாகவே அடித்தான் என்று சொல்ல வேண்டும். . செங்காட்டங்குடியில் இறைத் தொண்டும் அடியார் தொண்டும் செய்து அவர் துணைவியாருடனும் ஒரே