பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 74 இவ்வாறு ஐந்து வயதில் யாதொரு உறுப்புக் குறை பாடும் பிறவும் இன்றி, ஒரு குடிக்குத் திருமகனாய் உள்ள தம்மகனைத் தாய் பிடிக்க, தந்தை அரிய, அதனால் மனம் வாடாது மகிழ்ச்சியுடன் சமைத்து இட்டால் உண்பதாக இறைவன் கூறினார். இதைக் கேட்டு அடியவரும் துணை வியாரும் எண்ணிப் பார்த்தனர். பிள்ளையை வேண்டு மானாலும் வாங்கி விடலாம். எந்தத் தாய், தந்தை மகிழ்ச்சியோடு அந்த ஐந்து வயதுப் பிள்ளையை அரிய ஒருப்படுவார். ஒருவரும் இலரே என எண்ணி, அந்த எல்லாப் பண்புகளும் வயதும் உடைய தம் மகனையே கறியாக்க முடிவு செய்தனர். இதை அம்மையார் வாக் கால் சேக்கிழார் கூறுகின்றார்; அன்னையைத் திருவனை யார் எனவே அழைக்கின்றார். "என்றுகணவர் கூறுதலும் அதனுக்கிசைந்து எம்பெருமான் நின்று தாழாது அமுதுசெயப் பெற்றிங்கு அவர்தம் மலர்ந்தமுகம் நன்று காண்பம் என நயந்து நம்மைக்காக்க - வருமணியை சென்று பள்ளியினிற் கொண்டுவாரும் என்றார் திருவனையார்' (57) அவ்வாறே பிள்ளையை அழைத்து வந்து, மகிழ்ச்சி யோடு அரிந்து, கறியாக்கி, ஆண்டவனாகிய அடியவரை அழைத்து, உண்மின் எனக் கலந்திருத்தி உணவளிக்க, இறைவன் கருணை இன்னும் கடியதாக அமைந்தது. ஆம்! உடன் உண்ண வேறு அடியவரை அழைக்கப் பணித்தார். யாரும் கிடைக்கவில்லை யாதலால் சிறுத்தொண்டரையே உடன் இருந்து உண்ணச் செய்தார். தம் மைந்தர் கறியை அவரே உண்ணமுடியுமா!,. ஆயினும் அவர் சோதனையில் வெற்றிபெற்று உடன் அம்ர்ந்து உண்ணத் தொடங்