பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 73 பரமனருளால் பள்ளியினின்று ஓடிவருவான் போல்வந்த தரமில் வனப்பில் தனிப்புதல்வன் தன்னை

  • எடுத்துத் தழுவித்தம் கரமுன் அணைத்துக் கணவனார் கையில்

கொடுப்பக் களியார்ந்தார் புரமூன் றெரித்தார் திருத்தொண்டர் உண்ணப்பெற்றாம் எனும் பொலிவால்' (82) உடனே மூவரும் உள்ளே ஓடினர். அடியவர் இல்லை; அவர்முன் இட்ட இலை இல்லை. இலையில் இட்ட கறி இல்லை. திகைத்தனர் யாது நேர்ந்ததோ எனக் கவலை யுற்றனர். ஆனால் இறைவன் இம்மூவரைப் போன்றே தானும் அம்மையும் சரவணத் தனயனாம் முருகனும் ஒன்றாகத் தோன்றி விண்ணில் காட்சி அளித்தனர். ஆம்! இறைவன் எங்கும் அம்மை அப்பனாகக் காட்சியளிப் பதைத்தான் காண்கிறோம். ஆனால் இங்கே தம் மகனை யும் உடன் அழைத்து, இம்மூவருக்கும் காட்சி தந்து என்றும் அவர்களை வாழ வைத்து விட்டார். செய்யமெளலிக் கருங்குஞ்சிச் செழுங்கஞ் சுகத்துப் பயிரவர்யாம் உய்ய அமுது செய்யாதே ஒளித்து எங்கே எனத்தேடி மையல் கொண்டு புறத்தணைய மறைந்த - - அவர்தாம் மலைபயந்த தையலோடும் சரவணத்து தனயனோடும் தாம் அணையா' (84) அ-5