பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வாகவே கடந்த ஆகஸ்டில் நான்கு தலைப்புகளை (இந்நூலில் உள்ளபடி) நான் அமைத்துக் கொண்டு நான்கு புதன் கிழமைகளும் பேசி முடித்தேன். புதன் அறிவுக்கு ஆக்கம் அமைப்பவன். எனவே அந்நாளையே 'நிர்வாண்' பற்றிக் கொண்டதில் வியப்பில்லை அல்லவா!

நான் பேசிய பேச்சுகளைப் பெரும்பாலும் ஏட்டில் வடித்து வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் பத்துக்கும் மேற்பட்ட என் நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த முறையிலே இந்த நான்கு பேச்சுகளையும் தொகுத்து நூலாக்க முயன்றேன். முன்னமே அவை பற்றியும் குறிப்பு வைத்திருந்தேன். ஆதலின் தொகுப்பது எளிதாயிற்று. நூலும் அச்சிடப் பெற்று வெளிவருகின்றது.

'நிர்வாண்' சங்கத்தைத் தோற்றுவித்து, வளர்த்து, இன்று எங்கோ வேற்று மாநிலத்தில் தலைமை நடுவராகச் சிறந்த வகையில் பணியாற்றி வரும் மாண்பமை S. நயனார் சுந்தரம் அவர்கள் இன்றும் இதன் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். இந்தத் தலைப்பினைத் தந்தவரும் அவர்களேயாவர். எனினும் நான்கு கூட்டங்கள் ஒன்றிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆயினும் நூல் முடித்து, அவர்கள் கையில் நான் தந்த போது பெருமகிழ்ச்சியுற்றார்கள்.

அவர்தம் தந்தையர் திரு. எர்பர்ட் சுந்தரம் அவர்கள் காஞ்சியில் மாவட்ட நீதிபதியாக (District Munsiff) இருந்த போது நான் அவர்களோடு நெருங்கிப் பழகினவன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நான் காஞ்சியில் இருந்த போது அவர் பழக்கம் நேர்ந்தது. அவர்தம்