பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அம்மையும் அப்பனும் வருமோ. அன்றி நாளை வருமோ என்று அஞ்சக் கூடிய நிலையில் அவனியின் வாழ்வு அவல வாழ்வாக மாறிச் கொண்டு வருகிறது. 'ஏவிய திகிரி வீரரைத் துறக்கம் ஏறவிட்டிடும் இரவியைப் போல் மேவிய பகையாம் மைத்துனன் முடியை விளங்கு கோளகையுற வீசி ஆவிகள் அனைத்தும் நிறைத்தொளி சிறந்த அச்சுதன் அலைகொள் பாற்கடலுள் தீவிய அமுதம் அமரருக் களித்தோன் திருக்கரம் சென்று சேர்ந்ததுவே' (வில்லிபாரதம்) என்ற பாட்டில் வில்லியார் உவமை வாயிலாகச் சிசுபாலன் துறக்கம் எய்தி, திருமாலின் கோயிற் காவலனாயினான் என்பதைக் குறிப்பாக வெளியிடுகிறார். வீரரைத் துறக்கம் அனுப்பும் சூரியனைப் போலச் சிசு பாலனைக் கண்ணனின் சக்கரம் வைகுண்டம் அனுப் பிற்று என்பதாகும். எனவே இறைவனது மிகக் கொடு மையான அடியும் மிக மிக உயர்ந்த வாழ்வைத் தரும் என்பது தெளிவு. இனி, முருகன் சூரபதுமனை அடித்துத் தனக்கே ஆளாக்கிக் கொண்டதைக் காண்போம். சிவபெருமான் திருக்குமரன் முருகன் என்று புராண மரபு கூறினாலும் அவன் அனைத்துக்கும் அப்பாற்பட்டவன் என்ற உண் மையைப் பலர் பாராட்டியுள்ளனர். இராமலிங்க அடி சுளார், - 'பித்தப் பெருமான் சிவபெருமான் பெரியபெருமான் தனக்கரிய பிள்ளைப் பெருமான் எனப்புலவர் பேசிக்களிக்கும் பெருவாழ்வே