பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 79 மத்தப் பெருமான் நீக்குமொரு மருந்தே எல்லாம் வல்லோனே வஞ்சச் சமணர் வல்லிருளை மாய்க்கும் ஞான மணி விளக்கே அத்தக் கமலத்து அயில்படை கொள் அரசே மூவர்க்கருள் செய்தே ஆக்கல் அளித்தல் அழித்தல் எனும் அம்முத் தொழிலும் தருவோனே சத்த விகார உலகனைத்தும் தாளில் ஒடுக்கும் தனிப்பொருளே தணிகா சலமாம் தலத்தமர்ந்த சைவமணியே சண்முகனே' என்று சண்முகன் அப்பாலுக்கு அப்பாலாய் மூவர்க்கும் மேம்பட்ட மூர்த்தியாய் விளங்கி, அடியவர்களுக்கு அருளு வதற்கெனவே தணிகையில் தங்கியுள்ளான் எனக் கூறு கின்றார். இந்த இறைவன் பேர் உருக் கண்ட சூரபது மனே-போர்க்களத்தில், கோலமா மஞ்ஞை மீது குலவிய குமரன் தன்னைப் பாலன் என்றிருந்தேன் அன்னான் பரிசிவை உணர்ந்திலேன்யான் மாலயன் தனக்கும் ஏனைவானவர் தமக்கும் யார்க்கும் மூலகா ரணமாய் நின்றமூர்த்தி இம்முர்த்தி அன்றே! எனப் புகழ்ந்து போற்றுகின்றான். எனினும் அவன் மாயையின் மைந்தனாதலால், அம் மா ைய யா ல் மறைக்கப் பெற்று மறுபடியும் போர் செய்யத் தொடங்கு கின்றான். இறுதியில் மாமரமாக, முருகனின் சக்தி வேல் அதை இரு கூறாகப் பிளக்க, ஒன்றை மயிலாகவும், மற்ற தைக் கோழியாகவும் கண்டு, ஊர்தியாகவும் கொடியாக