பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அம்மையும் அப்பனும் வும் கொண்ட வரலாறு நாடறிந்ததே. இதன் வழி உயிர் களுக்கு அழிவு இல்லை என்பதும் நல்லுயிர் இறை வனொடு ஒன்றி எல்லாராலும் போற்றப்படும் என்பதும் நன்கு தெரிகின்றன. இவ்வாறு ஆண்டவன் அடித்தான் என்றால் அதனால் அடிபட்ட உயிர்களும் பிறவும் நலம் பெறும் என்பதை உணர்ந்து நாம் அவ்வடிகளை மகிழ் வோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். இனி ஆண்டவனாகிய அப்பன், அடியவரை அடித்துத் திருத்துவதோடு, அடியவர்களுக்காகத் தானும் அடிபட் டான் என்ற உண்மையினை இங்கே காணல் வேண்டும். 'வில்லால் அடிக்கச் செருப்பால் உதைக்க வெகுண்டொருவன் கல்லால் எறியப் பிரம்பால் அடிக்கக் களிவண்டுகூர் அல்லார் பொழிற்றில்லை அம்பல வாணருக்கோர் அன்னைபிதா இல்லாததால் அல்லவோ இறைவா கச்சி ஏகம் பனே' எனப் பட்டினத்தார் தாயுமிலி தந்தையிலி தான்தனியன் கானேடி என்ற இறையின் தன்மையைக் காட்டி, அவன் அடியவர்களுக்காக எவ்வெவ்வாறு அடிபட்டான் என்ப தையும் காட்டி அவன் அருட்திறத்தைப் போற்றிப் புகழ் கின்றார் அர்ச்சுனன் தவநிலைச் சருக்கத்தைப் பாடிய வில்லி யார் அர்ச்சுனனுக்கும் இறைவனுக்கும் நடந்த சண்டை யினையும் அப்போது இறைவனை வில்லால் அடித்ததை யும், பின் இறைவன் காட்சி தந்து பாசுபதத்தைத் தந்த தையும் தெளிவாகக் காட்டியுள்ளார். அன்பின் வயப்பட்டு ஆறே நாளில் ஆண்டவன் அடி அடைந்த கண்ணப்பர், குறி தவறாதிருக்க, தன் மறு