பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 3ຜ່ຄມແມ່ அப்பனும் என்று தன் பங்கு அடைக்க ஆள் இல்லா நிலையினையும் அரசனது ஆணையினையும் எண்ணிப் புலம்பும் வந்தியின் நிலையைப் பரஞ்சோதியார் சில பாடல்களில் விளக்கு கிறார். இப்பாடலில் எந்தாய்' என இறைவனை விளித்து, தன் நிலையினை விளக்கி, அவளைக் காப்பார் யாரும் இல்லை என்பதை, சேயாகிய தன்னை அடித்தால் தாய் பொறுக்க மாட்டாள் என்ற நினைவில் புலம்புகின் றாள். தாயாகிய இறைவன் வாராதிருப்பானோ! வந் தான். ஆம்! தன் நிலையெலாம் மறந்து மண்வெட்டியும் கூடையும் ஏந்திக் கூலியாளாய் வந்தான். அவள் அவனைக் கண்டு அவனுக்கு வேண்டிய உதிரிப் பிட்டு களையெல்லாம் தந்து வேலைக்கு அனுப்புகிறாள். "தந்தையொடு தாயின்றித் தனிக்கூலி ஆளாக வந்த எனக்கு ஒரு தாயாய் அருள்காந்து - மாறாத இந்த இளைப்பு ஒழித்தனையே இனிவேலை தலைச்சென்று சிந்தை களிப்பெழ வேலை செய்வேன், என்றிசைத்து எழுந்தார்’ என்று அவர் வேலை செய்யப் புறப்பட்டதைக் குறிப்பார். ஆயினும் அங்கே சரியாக வேலை செய்யா நிலையில், அப்பங்கு அடைபடாதிருக்க, பார்க்க வந்த அமைச்சர்கள் வெகுண்டாலும் அவன் உருவம் கண்டு அஞ்சினர். ஆம்! அடிபட்டாலும், அரசன் மணிவாசகரை உணரவேண்டிய அடிகள்-அக் கையால் அடிபட வேண்டுமல்லவா! 'ஆண்டகை வனப்பை நோக்கி அடிக்கவும் இல்லேம்; அஞ்சி ஈண்டினேம்' என்று அமைச்சர் கூற அரசனே அந்த இடஞ்சென்று கண்டான். வந்த அரசனிடம்,