பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அம்மையும் அப்படும் என்று காட்டி அதற்கப்பாலும் அது சென்றதை-மண் ணுலகும் விண்ணுலகும் பிரமன், மால் உலகும் எங்ங்னும் பட்ட நிலைமையினையும் விளக்குகிறார். 'வானவர் மனிதர் நரகர் புள்விலங்கு - மாசுணம்சிதல் எறும்பாதி ஆனபல் சரமும் மலைமரம் கொடிபுல் ஆதியாம் ஆரமும்பட்ட ஊனடைகருவும் பட்டன தழும்போடு உதித்தன உயிரில் ஒவியமும் தாண்டிபட்ட சராசர மடங்கல் தமக்கு உயிராயினோன் தழும்பு' (53) 'துண் என மாயோன் விழித்தனன் கமலச் சோதியும் யாதென வியந்தான் விண்ணவர் பெருமான் வெருவினான் வேறுளார் மெய்ப்பணிப் படைந்தார் வண்ணயாழ் இயக்கர் சித்தர் சாரணர்தம் வடுப்படா உடம்பினில்பட்ட புண்ணையா தென்று தத்தமிற்காட்டி மயங்கினார் புகுந்தவா ரறியார் (56) என்றும் இன்னும் பலவகையிலும் காட்டி இறைவர் பட்ட அடியினை அகில அண்டத்துக்கும் அதற்கப்பாலும் உள்ள வர்க்கும் உரியதாக்குகிறார் பரஞ்சோதியார். இறைவன் மறைய-கொட்டிய பண்ணால் வையைவற்ற, பாண்டிய னும் மற்றவரும் ஒன்றும் அறியாராய், அவனை ஆளாகக் கொண்ட வந்தியிடம் கேட்கச் சென்றனர். அதே வேளை விண்ணிழி விமானத்தில் வந்தியைத் தேவர்கள் இறை யுலகுக்கு இட்டுச் சென்றனர். பின் இறைவன் மணி வாசகர் பெருமையினையும் அவன் பொருட்டாகவே