பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 85 தாம் வந்ததையும் விளக்கிக் கூறி, அன்பர் பொருட்டு எதையும் செய்வோம் என்பதை அவனுக்கும் உலகுக்கும் உணர்த்தினார். அவனும் உடன் சொக்கேசர் கோயில் சென்று, அங்கு இறைவனை வழிபட்டு நின்ற மணிவாச கரை, 'தொல்லைநீர் உலக மாண்டு சுடுதுயர் நரகத் தாழ வல்லஎன் அறிவுக்கேற்ற வண்ணமே செய்த நீர்என் எல்லைதீர் தவப்பேறாய் வந்து இகபரவேது வாகி அல்லல் வெம்பிறவி நோய்க்கு அருமருந்தானிர் ஐயா (78) என வாழ்த்தி, இறைவனையும் வணங்கிப் பேறு பெற் றான். 'வஞ்சகர்பால் நடந்தலைந்த காலில் புண்ணும் வாசல்தொறும் முட்டுண்ட தலையில் புண்ணும் செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சில் புண்ணும் தீரும்என்றே சங்கரன்பால் சேர்ந்தேன் e9| LJLJ/T கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன் கொடுங்காலால் உதைத்த புண்ணும் கோபமாகப் பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும் பார் என்றே காட்டி நின்றான் பரமன் தானே'