பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அம்மையும் அப்பனும் என்ற பிற்காலப் புலவனின் பாடலும் இங்கே நினைவு கூர்தற்குரியதன்றோ! இவ்வாறு இறைவன் மற்றவாை அடித்துத் திருத்திய தோடு அல்லாமல் தானே அடிபட்டும் தரணியையும் அண்டத்தையும் அருள் நெறியில் ஆட்படுத்தி வருகின் றான். இச்செயல் என்றும் நிகழும் செயலாகும். இன்றைய அண்டம் வளர்ந்து கொண்டே வருகின்றது என்பர் ஆய் வாளர். என்றும் வளரும், என்றும் வாழும் அகன்ற அண்ட கோளத்தினையும் அவற்றில் நிலைபெற்று வாழும் உயிரினங்களையும் ஆண்டவன் இவ்வாறெல்லாம் அடித் தும் அடிபட்டும் திருத்திச் செம்மையாக்கிக் கொண்டே இருக்கின்றான். இன்று நாம் வாழும் உலகம் நாளையோ அன்றி என்றோ நிலைகெட்டு, மாறி, அழிவுற்று வேறு நிலை அடைந்தாலும் அதில் வாழும் ஆன்மாக்களாகிய நாம் வேறு எங்காவது எப்படியாவது அவன் அடிநிழலில் நின்று வாழ்வோம் என்பது உறுதி. எனவே, இந்த அள வில் இன்றைய பேச்சினை நிறுத்தி, அடுத்த புதன்கிழமை இந்த இருவரையும்-அம்மையையும் அப்பனையும் பெற்ற ஆன்மாவினைப் பற்றியும் அடுத்து ஆன்மா வாழும்படி வளரும் அண்டகோளத்தினைப் பற்றியும் அறிந்து காண் போம். வணக்கம்.