பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பண்பும் தமிழ்ப்பற்றும் சமய உள்ளமும் என்னை அவர்பால் ஈர்த்தன. பின் பல ஆண்டுகள் கழித்து அவர் மகனான-உயர்நீதி மன்ற நடுவரை-மாண்பமை நயனார் சுந்தரம் அவர்களை- நிர்வாண் நிறுவனராகச் சென்னை யில் கண்ட போது, தந்தையைப் போன்றே தொண்டு மனப்பான்மையும் தூய உள்ளமும் பற்றற்ற வாழ்க்கை நெறியும் கொண்ட இவர்தம் சிறப்பினை அறிந்தேன். எனவே முன்பும் பலமுறை நிர்வாண் சங்கத்தில் பேசியுள்ளேன். இன்றைய பேச்சுகளை நூலாகக் கண்ட அவர்கள் மகிழ்ந்தார்கள். அவர்களையே ஓர் முன்னுரை தருமாறு வேண்டினேன். தந்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக! பிற நிர்வாண் சங்க உறுப்பின ருக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நான்கு வாரங்களிலும் நடைபெற்ற கூட்டங்களுக்கு வந்து வாழ்த்தி ஊக்குவித்த அனைவருக்கும். நன்றி. இச்சொற்பொழிவுகளுக்கு உரிய குறிப்புகளைச் சேர்த்தபோதும் அச்சிடும்போதும் பலவகையிலும் நன்கு, பிழைத்திருத்தியும் உதவிய பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. டாக்டர். சா. வளவன் அவர் களுக்கும் என் நன்றி உரித்து. இந்நூலுக்கு மூலப்பொருளாய் நின்ற அம்மையையும் அப்பனையும் வணங்கி, வழிபட்டு, அவர்கள் வழி அண்டங்கள் நலம் பெற வேண்டுமென வேண்டி, அனை வரையும் வணங்கி, இந்த நூலை இன்று உங்கள் முன்நாட்டில் உலவ விடுகிறேன். ஏற்று நலம் காண வேண்டு கிறேன். - - பணிவுள்ள, சென்னை-102. } அ.மு. பரமசிவானந்தம் 11–6–94. நிறுவனர் வள்ளியம்மாள் கல்வி அறம்.