பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா -- - -- 91 எண்ணிய தொல்காப்பியர் தமிழ் எழுத்து, சொல், பொருள் இவை பற்றி எண்ணி எழுதும் போது, முதலா வதாக இவ்வுயிர்த் தத்துவத்தையே விளக்குகிறார். உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே' என்றும், மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே (எழுத்து 18, 20) என்றும், உயிர் உடலோடு பொருந்தும் நிலையினையும் மெய் இன்றேல் உயிர் தோன்ற வழி இல்லை என்றும் காட்டுகின்றார். மேலும் இந்த உடம்பிலிருந்து-மெய் யிலிருந்து, உயிர் பிரியின் அது தன் தனிப்பட்ட பசு' உருவிலே சென்று விடும் என்பதையும் எந்த மெய்யோடு உயிர் சேர்ந்தாலும் அதனுடைய இயல்பான இயல் திரியாது நிற்கும் என்பதையும் காட்டுகிறார். மெய் உயிர் நீங்கின் தன் உருவாகும்' . (13) என்றும், - "மெய்யோடு இயையினும் உயிரியல் திரியாது' (10) என்றும் அவர் கூறுகின்றார். இனி இந்த உயிரை, அதன் வினை வந்து பற்றுவதையும், தனக்கு உரியவனையே அது வந்து காலமறிந்து, இடமறிந்து சேர்ந்து அதன் பய~ை அவ்வுயிர் நுகர வழி வகுக்கும் என்ற உண்மையினையும் வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலை காலமொடு தோன்றும் - (வினை 196)