பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அம்மையும் அப்பனும் என்று காட்டுவர் தொல்காப்பியனார். வேற்றுமை கொள்ளாது என்ற வழி தன்னைச் செய்தவனை விட்டு வேறு ஒருவனைப் பற்றாது என்றும் அல்வினை பயன்தரச் காலம் பார்த்து நிற்கும் என்பதனைக் காலமொடு தோன்றும் எனவும் காட்டியுள்ளார். இவ்வாறு உயிர் முன் செய்த வினையின் பயன் வழியே செயல்படுவதால் அதன் பெருமையைப் பாராட்டுவதோ சிறுமையை இகழ் வதோ தேவை இல்லை என்று சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார் சொல்லியுள்ளார். ஆற்று வெள்ளத்திலே அடித்துச் செல்லப்படும் புணை போல்துரும்பு போல் உடலில் புகுந்த உயிர் தன் வினை வழியே செயலாற்றுகின்றது என்கிறார் அவர். - கல்பொரு திரங்கு மல்லற் பேரியாற்று நீர்வழிஇப் படும் புணைபோல், ஆருயிர் முறைவழிப் படுஉம என்பது திறவோர் காட்சியில் தெளிந்தன மாதலின் மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! (புறம் 192) என்கின்றார். இந்த உயர்ந்த தத்துவத்தை உலகு உணர்ந் தால் கண்டவரை - பதவி, பணம் பிற காரணங்களுக் காகப் புகழ்வதும் போற்றுவதும் பெரும் உருவக் காட்சி கள் அமைப்பதும் இன்றி நாடும் உலகமும் அமைதியாக வாழுமே உலகம் இந்தத் தமிழ்ப்புலவர் வாய்மொழிப்படி என்று வாழுமோ? . . - உயிர் வினையின் வயத்தால் வந்தது என்பதனைச் சாத்தன்ார், வினையின் வந்தது வினைக்கு விளைவாயது புனைவன நீங்கில் புலால் புறத்திடுவது மூப்புவிளி உடையது தீப்பிணி இருக்கை