பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 95 'இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் - காட்டொணாதே' என்று அப்பரும், ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட் டாமோ என்று மணிவாசகரும் இறைத்தன்மையைக் கூறியபடியேதான் உயிர்த்தன்மையும் உள்ளது. இறை வன் நினைப்பவர் உள்ளபடி பல உரு, பல பெயர் பெறுவது போன்றே, உயிரும் தான் சேரும் இடத்துக்கு ஏற்ப உருவும் திருவும் செயலும் சிறப்பும் பெற்று வாழ்கின்றது. எனினும் அதைக் காண இயலாது. உயிர் போயிற்றே என்று அலறுவாரைக் கண்டு கபிலர், 'எற்றுக் கழுவீர் ஏழை மாந்தர்காள் உயிரினை இழந்தோ உடலினை இழந்தோ உயிரினை இழந்தென் றோதுவீ ராயின் உயிரினை அன்றும் காணiர் இன்றும் காணிர் உடலினை இழந்தென் றோது வீராயின் உடலினை அன்றும் கண்டீர் இன்றும் காண்பீர்' என்று கூறித் தேற்ற முற்படுகின்றார். எனவே காணா இறைவன் தன்மையை ஒத்து, உயிரும் இன்னதெனக் காணா வகையில் ஆயிரக் கணக்கான உடல் நிலைகளில் 'எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதத்து' மாறி மாறி நின்று தன்னை வெளிக்காட்டாமலே, இறுதி யில் இறைநிலை உறுகின்றது என்னலாம். இந்த உயிருக்கு நாற்பத்தொன்பது வகையில் விளக்கம் தந்துள் ளார் வின்ஸ்லோ என்ற தமிழ் ஆங்கில அகராதி எழுதிய மேலைநாட்டு அறிஞர். இனி 'சீவன் என்ற சொல்லுக்கு Witality என்ற பொருள் கண்டு, அது புல் முதலாகிய ஓரறிவுடைய உயிர் தொடங்கி ஆறறிவுடைய மனிதன்